»   »  மாதவன் மறுத்திருந்தால், அக்ஷய்குமாரை நடிக்க வைத்திருப்பேன் - இறுதிச்சுற்று சுதா

மாதவன் மறுத்திருந்தால், அக்ஷய்குமாரை நடிக்க வைத்திருப்பேன் - இறுதிச்சுற்று சுதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இறுதிச்சுற்று படத்தில் நடிக்க மாதவன் மறுத்திருந்தால் அக்ஷய்குமார் அல்லது சன்னி தியோலை வைத்து எடுத்திருப்பேன் என்று இயக்குநர் சுதா தெரிவித்திருக்கிறார்.

ஜனவரி இறுதியில் வெளியாகி ஒட்டுமொத்தமாக ரசிகர்களை கட்டிப்போட்ட இறுதிச்சுற்று படம் இன்னும் பல அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.


தமிழ், இந்தி என்று 2 மொழிகளிலும் வெளியான இந்தப்படம் ரசிகர்களை மட்டுமின்றி மணிரத்னம், பாலா, சூர்யா என்று பல பிரபலங்களையும் கவர்ந்தது.


இறுதிச்சுற்று

இறுதிச்சுற்று

பாக்ஸிங்கில் நடக்கும் முறைகேடுகள், அரசியல் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய இறுதிச்சுற்று ரசிகர்கள் விமர்சகர்கள் மட்டுமின்றி ரசிகர்களிடமும் பாராட்டுகளைக் குவித்தது. ஜனவரி இறுதியில் வெளியான இப்படத்தின் மூலம் இயக்குநர் சுதா தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்.
தெலுங்கு

தெலுங்கு

தமிழ், இந்தியில் வரவேற்பைப் பெற்ற இப்படத்தை அடுத்ததாக தெலுங்கு மொழியில் இயக்க சுதா முடிவெடுத்திருக்கிறார். இப்படத்தால் கவரப்பட்ட நடிகர் வெங்கடேஷ் இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புவதாக கூறியதைத் தொடர்ந்து விரைவில் தெலுங்கிலும் இறுதிச்சுற்று உருவாகவுள்ளது.


அக்ஷய்குமார்

அக்ஷய்குமார்

இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர் சுதா அளித்த பேட்டி ஒன்றில் "இறுதிச்சுற்று படத்தில் ஹீரோவாக மாதவனை நடிக்க வைக்கவே எண்ணியிருந்தேன். அவர் ஒப்புக் கொள்வார் என்று எனக்கு நிச்சயமான நம்பிக்கை இருந்தது. ஒருவேளை அவர் மறுத்திருந்தால் அக்ஷய்குமார் அல்லது சன்னி தியோலை அணுகியிருப்பேன்.


இறுதிச்சுற்று 2

இறுதிச்சுற்று 2

இந்தியில் படம் தோல்வியடைந்தாலும் தமிழில் நிச்சயம் வெற்றி பெறும் என்ற எனது நம்பிக்கை பொய்யாகவில்லை.இறுதிச்சுற்று படத்திற்கே நிறைய உழைக்க வேண்டியிருந்தது. ஒரு இயக்குநராக படாத பாடு பட்டேன், இந்நிலையில் இறுதிச்சுற்று படத்தின் 2 வது பாகம் எடுப்பது குறித்த எந்த சிந்தனையும் எனக்கு இல்லை" என்று உறுதியாக தெரிவித்திருக்கிறார்.


English summary
"Madhavan Refuse to act in The film, Next i will Choose Akshay Kumar or Sunny Deol" Irudhi Suttru Director Sudha Says in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil