விடிவி பார்ட் 2-வில் சிம்புவுக்கு பதிலாக மாதவன்... சிம்புவை ஏன் கழட்டிவிட்டார் கௌதம்?

By Vignesh Selvaraj

சென்னை: கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற காதல் திரைப்படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'.

சிம்பு, திரிஷா நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்தப் படம் பல காதலர்களின் எவர்கிரீன் ஃபேவரிட் படமாக உள்ளது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மாதவன் நடிக்கவுள்ளார். முதல் பாகத்தின் ஹீரோவான சிம்புவுக்கு பதிலாக கார்த்திக் கேரக்டரில் நடிக்கிறார் மாதவன்.

விண்ணைத்தாண்டி வருவாயா

விண்ணைத்தாண்டி வருவாயா

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான இப்படத்தை மதன், எல்ரெட் குமார், ஜெயராமன் இணைந்து தயாரித்தார்கள்.

இப்போதும் வரவேற்பு

இப்போதும் வரவேற்பு

தமிழ் திரையுலகில் காதலர்கள் மத்தியில் மிகவும் கொண்டாடப்பட்ட படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. தற்போது வரை இப்படத்தின் பாடல்களுக்கு செம வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என கௌதம் மேனன் கூறியிருந்தார்.

சிம்புவுக்கு பதிலாக மாதவன்

இந்நிலையில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' இரண்டாம் பாகத்தில் சிம்புவுக்கு பதிலாக மாதவன் கார்த்திக் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை மாதவன் தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். ஹீரோயின் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மின்னலே கூட்டணி

மின்னலே கூட்டணி

மாதவனின் சினிமா பயணத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கௌதம் மேனனின் முதல் படமான 'மின்னலே'வில் மாதவன் நடித்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

சிம்பு ஏன் இல்லை?

சிம்பு ஏன் இல்லை?

சிம்புவின் திரைப்பயணத்தில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இல்லாததற்கு 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X