»   »  இறுதிச்சுற்று: மாதவனைத் தொடர்ந்து... வெங்கடேஷுடன் 'டிஷ்யூம் டிஷ்யூம்' போடப் போகும் ரித்திகா

இறுதிச்சுற்று: மாதவனைத் தொடர்ந்து... வெங்கடேஷுடன் 'டிஷ்யூம் டிஷ்யூம்' போடப் போகும் ரித்திகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ், இந்தி ரசிகர்களைக் கவர்ந்த ரித்திகா சிங்கிற்கு அடுத்ததாக டோலிவுட் கதவுகளும் திறந்துள்ளன.

ஆமாம் இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தனக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்க வெங்கடேஷ் பச்சைக் கொடி காட்டி விட்டாராம்.

Madhavan's Irudhi Suttru Remade in Telugu

குத்துச்சண்டையை மையமாக வைத்து கடந்த மாதம் வெளியான இறுதிச்சுற்று படம் தமிழ் சினிமா ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று தற்போது ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்த மாதவனை விட அறிமுக நாயகி ரித்திகா சிங்கின் நடிப்பை பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய வெங்கடேஷ் சமீபத்தில் இந்த படத்தைப் பார்த்து விட்டு தெலுங்கு ரீமேக்கில் நான் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதற்கு இயக்குநர் சுதாவும் ஒப்புதல் தர தற்போது தெலுங்கு மொழிக்கு செல்கிறது இறுதிச்சுற்று. மிக விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தில் மீண்டும் நாயகியாக நடிக்கப் போகிறார் ரித்திகா.

இதன் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மனதையும் ரித்திகா சிங் குத்தகைக்கு எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said Madhavan's Iruthi Suttru are Currently being Remade in Telugu Language.The Official Announcement of this Film Expected Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil