தேசிய நீச்சல் போட்டியில் 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்ற மாதவன் மகன்

By Siva

சென்னை: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

மாதவனின் மகன் வேதாந்த் ஒரு நீச்சல் வீரர். அவர் தொடர்ந்து நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்று தாய், தந்தைக்கு பெருமை தேடிக் கொண்டிருக்கிறார்.

Madhavans son won 3 gold, one silver medal at Junior Nationals Swim meet

இந்நிலையில் தனது மகன் புதிய சாதனை படைத்துள்ளதாகக் கூறி மாதவன் ட்வீட் செய்துள்ளார். அவர் தனது மகன் குறித்து கூறியிருப்பதாவது,

உங்களின் ஆசி, வாழ்த்துக்கள், கடவுளின் அருளால் வேதாந்த் மீண்டும் எங்களை பெருமை அடையச் செய்துள்ளார். ஜூனியர்களுக்கான தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். தேசிய அளவில் தனியாக பதக்கம் வாங்குவது இதுவே முதல் முறை. அடுத்து ஆசிய போட்டிகள். பயிற்சியாளர்கள், குழுவினருக்கு நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.

மாதவனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வேதாந்த் மேலும் பல பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று அனைவரும் வாழ்த்துகிறார்கள். தன் மகனை மனதார வாழ்த்துபவர்களுக்கு மாதவன் நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடந்த போட்டியில் கலந்து கொண்ட வேதாந்த் 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தியாவுக்காக வேதாந்த் வென்ற முதல் பதக்கம் அது. அப்பொழுதும் மாதவன் தனது மகனை பற்றி பெருமையாக ட்வீட் போட்டார்.

இத்தனை ஆண்டுகளாக நடிகராக இருந்த மாதவன் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். மணிரத்னத்தின் மனம் கவர்ந்த மாதவன் படத்தை இயக்கியுள்ள விதத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

ராக்கெட்ரி படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்து கொண்டிருக்கிறார் மாதவன். வயதான நம்பி நாராயணனின் கெட்டப்பில் மாதவனை பார்த்தவர்கள் வியந்துவிட்டனர். காரணம் உண்மையான நம்பி நாராயணன் யார், மாதவன் யார் என்றே அடையாளம் தெரியவில்லை.

தான் நடிகர் என்பதால் மகனும் திரைத்துறைக்கு தான் வர வேண்டும் என்று மாதவன் அடம் பிடிக்கவில்லை. மகனுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்யட்டும் என்று முழு சுதந்திரம் கொடுத்து ஊக்கப்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X