Rocketry public Review : யார் இந்த நம்பி நாராயணன்?.. மாதவனுக்கு குவியும் பாராட்டு!

சென்னை : நடிகர் மாதவன் தயாரித்து இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் இன்று வெளியான படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Recommended Video

நம்பி நாராயணன் பயோபிக்கை கச்சிதமாக செய்தாரா மாதவன்? | Rocketry Movie Review Tamil *Kollywood

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை இத்திரைப்படம் விவரித்துள்ளது. 80 வயதான நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்துள்ளார்.

தமிழ் உட்பட மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகி உள்ளது. முதல் படத்திலேயே ரிஸ்க்கான கதையை கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ள மாதவனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் குறித்து பொதுமக்கள் கூறிய கருத்தைப் பார்க்கலாம்.

யார் இந்த நம்பி நாராயணன்?

யார் இந்த நம்பி நாராயணன்?

நெல்லையை பூர்வீகமாக கொண்டவர் நம்பி நாராயணன். நாகர்கோவிலில் பள்ளி படிப்பையும், மதுரையில் பொறியியல் பட்டப்படிப்பும், திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் பட்ட மேற்படிப்பையும் பயின்றுள்ளார். இதையடுத்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவில் கெமிக்கல் ராக்கெட் புரோபல்ஷன் தொடர்பாக தனது ஆராய்ச்சி சார்ந்த படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார்.

கைது செய்யப்பட்டார்

கைது செய்யப்பட்டார்

1970ம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்த நம்பி நாராயணன், பிஎஸ்எல்வி-யின் இரண்டாம் மற்றும் நான்காம் நிலைகளின் திட்ட இயக்குநர், கிரையோஜெனிக் திட்ட இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளின் கீழ் இஸ்ரோவில் பணியாற்றியுள்ளார். சுமார் 20 ஆண்டு காலம், இஸ்ரோவில் பணியாற்றிய நம்பி நாராயணன் 1994ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

போதிய ஆதாரங்கள் இல்லை

போதிய ஆதாரங்கள் இல்லை

இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்ற குற்றச்சாட்டால் கைது செய்யப்பட்டு, சுமார் 50 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த சிபிஐ, குற்றசாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை கூறி அவரை விடுதலை செய்தது. இப்படி ஒரு ரிஸ்க்கான கதையைத்தான் மாதவன் இயக்கி உள்ளார்.

நம்பி நாராயணனாக மாறிய மாதவன்

நம்பி நாராயணனாக மாறிய மாதவன்

இன்று வெளியான இத்திரைப்படத்தைப் பார்த்த பொதுமக்கள், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதை என்று கூறியதும், அவரைபற்றிய கட்டூரைகளை தேடிபடித்தேன். அவரது வாழ்க்கை சுவாரசியமாக இருந்ததால், படம் பார்க்க வந்தேன் படம் மிகவும் சுவாரசியமாக உள்ளது. இந்தபடத்தை படமாக எடுத்ததை விட வெப் சீரியாக எடுத்திருந்தால், நம்பி நாராயணன் பற்றி இன்னும் நிறைய தகவல்களை சொல்லி இருக்க முடியும் என்று படம் பார்த்த ரசிகர் ஒருவர் கூறினார். மேலும், மாதவன் நம்பி நாராயணனாகவே வாழ்த்து இருக்கிறார் என்றார்.

மெய் சிலிர்க்கிறது

மெய் சிலிர்க்கிறது

காலையில் முதல்காட்சியைப் பார்த்த ரசிகர் ஒருவர், படம் பார்த்தேன் என்பதை விட நம்பி நாராயண் வாழ்க்கையை 3 மணிநேரம் வாழ்த்து வந்தது போல இருப்பதாக கூறினார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தில் சொன்ன விதம் நேர்மை என ஒவ்வொரு விஷயமும் என்னை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. நம்பி நாராயணான் ஒரு விஞ்ஞானியாகவே அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்தபடத்திற்கு பிறகு நாடு போற்றக்கூடிய ஒருவராக மாறியுள்ளார் என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X