»   »  மாதவன் - சாய் பல்லவி - இயக்குநர் விஜய் கூட்டணியில் புதிய படம்!

மாதவன் - சாய் பல்லவி - இயக்குநர் விஜய் கூட்டணியில் புதிய படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாதவன் - சாய் பல்லவி - இயக்குநர் விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை தயாரிப்பதன் மூலம், தமிழ் திரையுலகில் முதல் முறையாக அடியெடுத்து வைக்கின்றது 'பிரமோத் பிலிம்ஸ்'.ய

'இறுதிச் சுற்று' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார் நடிகர் மாதவன்.

Madhavan - Sai Pallavi - Director Vijay teams up for first time

அடுத்து இந்தி திரையுலகின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான 'பிரமோத்' பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரத்தீக் சக்கரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்தப் பெயரிடப்படாத திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

"1958 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்தி திரையுலகின் மதிப்பிற்குரிய தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் எங்களின் பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம், தற்போது முதல் முறையாக தமிழ் திரையுலகில் தலைச்சிறந்த நட்சத்திர கூட்டணியோடு கால் பதிக்க இருப்பது, மிகவும் பெருமையாக இருக்கின்றது. மாதவன் மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் ஜோடிப் பொருத்தம், நிச்சயமாக தமிழ் ரசிகர்களால் பெரிதளவில் வரவேற்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. திரைப்படத்தை இயக்குவது என்பது ஒரு கலை. அந்த கலையில் கைதேர்ந்த இயக்குநர் விஜய் சாரோடு நாங்கள் கைக்கோர்த்து இருப்பது அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது," என்கிறார்கள், தயாரிப்பாளர்கள் பிரத்தீக் சக்கரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா.

படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை, விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வரும் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

English summary
Madhavan, Sai Pallavi and Director Vijay have joined together for the first time for an untitled movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil