மிரட்டுறாங்களே.. வெளியானது மாதவனின் சைலன்ஸ்.. அமேசானில் வந்ததுமே தமிழ் ராக்கர்ஸிலும் ரிலீஸ்!

By

சென்னை: அமேசான் பிரைமில் சைலன்ஸ் படம் வெளியான அடுத்த நிமிடமே, தமிழ் ராக்கர்ஸும் அதை திருட்டுத்தனமாக ரிலீஸ் செய்துள்ளது.

Recommended Video

வயசாகியும் சில HEROES ROMANCE ...அருவருப்பா இருக்கு | CLOSE CALL WITH MADHAVAN | FILMIBEAT TAMIL

மாதவன், அனுஷ்கா நடித்துள்ள படம், நிசப்தம். தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் உருவாகி இருக்கிறது,

இந்தப் படத்துக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்று டைட்டில் வைத்துள்ளனர்.

ஷாலினி பாண்டே

ஷாலினி பாண்டே

முழுவதும் அமெரிக்காவில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தில், மைக்கேல், அஞ்சலி, 'அர்ஜுன் ரெட்டி' ஷாலினி பாண்டே, மைக்கேல் மேட்சன், ஒலிவியா டங்க்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ள இந்தப் படத்தை கோனா வெங்கட், விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளனர். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார்.

தள்ளி வைப்பு

தள்ளி வைப்பு

இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்ட நிலையில், கடந்த வருடமே படம் வெளியாகும் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் ஜனவரி 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்து பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுத் தெரிவித்திருந்தது. அந்த தேதியிலும் ரிலீஸ் ஆகவில்லை. பின் ஏப்ரலுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

பொன்மகள் வந்தாள்

பொன்மகள் வந்தாள்

அதற்குள் கொரோனா பிரச்னை ஏற்பட்டதால் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்பட சில படங்கள் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் இந்தப் படமும் அமேசானில் நேற்று இரவு வெளியானது.

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ்

சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை கொண்ட இந்தப் படம் அமேசானில் வெளியான அடுத்த நிமிடமே தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்திலும் திருட்டுத்தனமாக வெளியாகி உள்ளது. வழக்கமாக படங்களை திருட்டுத்தனமாக ஆன்லைனில் லீக் செய்யும், தமிழ்ராக்கர்ஸ் இந்தப் படத்தையும் விட்டு வைக்கவில்லை. இது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருட்டுத்தனமாக

திருட்டுத்தனமாக

தமிழ்ப் படங்கள் என்று மட்டும் இல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை அந்த இணையதளம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X