»   »  கமல் மாதவனை சொல்ல அவர் உங்களை பேசச் சொல்கிறார் மக்களே!

கமல் மாதவனை சொல்ல அவர் உங்களை பேசச் சொல்கிறார் மக்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸனின் வேண்டுகோளை ஏற்று நடிகர் மாதவன் தமிழகத்தின் நெருக்கடி நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் தமிழகத்தின் நெருக்கடி நிலை குறித்து பேசுமாறு நடிகர் மாதவனை கேட்டுக் கொண்டார்.

கமலின் வேண்டுகோளை ஏற்று மாதவன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தமிழகம்

இந்தியாவை விடுங்க உலக அளவில் தமிழகம் சிறந்த மாநிலமாக இருப்பது குறித்து நாம் ஆலோசித்துள்ளோம் சார். நம்மிடம் இருக்கும் திறமையால் நாம் தான்...

எடுத்துக்காட்டு

நான் உலகிற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். கொட்டிக்கிடக்கும் திறமையை பயன்படுத்த சரியான நோக்கமும், தலைமையும் தேவை.

நேரம்

திறமையை சரியான பாதையில் கொண்டு செல்ல இதுவே சரியான நேரம். இதை ஒட்டுமொத்த மாநிலமும் நம்ப வேண்டும். மேலும் அனைவருக்கும் கேட்கும்படி குரல் கொடுக்க வேண்டும்.

நடக்கும்

இது சரியான நேரத்தில் நடக்கும் என நம்புகிறேன். பேசுங்கள் மக்களே...உங்களின் குரல் கேட்கப்பட வேண்டிய நேரம் என மாதவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Madhavan has talked about the crisis in Tamil Nadu after Kamal Haasan asked him to do so.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil