»   »  நடிகர் மாதவனுக்கு திடீர் ஆபரேஷன்... விரைவில் குணம்பெற ரசிகர்கள் வேண்டுதல்!

நடிகர் மாதவனுக்கு திடீர் ஆபரேஷன்... விரைவில் குணம்பெற ரசிகர்கள் வேண்டுதல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மருத்துவமனையில் மாதவன்- வீடியோ

சென்னை : நடிகர் மாதவன் 'இறுதிச்சுற்று' படத்திற்கு பிறகு தனக்கு ஏற்ற கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து மிகவும் சுறுசுறுப்பாக நிறைய படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த 'விக்ரம் வேதா' படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர். அடுத்து 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படத்தில் நடிக்கவிருக்கிறார் மாதவன்.

இந்நிலையில், திடீரென மாதவனுக்கு தோள்பட்டையில் ஆபரேஷன் நடைபெற்றுள்ளது. இந்த தகவலை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார் மாதவன்.

மாதவன்

மாதவன்

நடிகர் மாதவன் தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் அசத்தலான ட்ராக்கில் பயணித்து வரும் மாதவன் விஜய் சேதுபதியுடன் இணைந்து 'விக்ரம் வேதா' படத்தில் ரசிகர்களை ஈர்த்தார்.

கௌதம் மேனன் படத்தில் மாதவன்

கௌதம் மேனன் படத்தில் மாதவன்

தற்போது கௌதம் மேனன் இயக்கப்போகும் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் மாதவன் தான் நடிக்கவிருக்கிறார் எனும் தகவல் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது.

தோள்பட்டையில் ஆபரேஷன்

தோள்பட்டையில் ஆபரேஷன்

இந்த நிலையில் தோள் பட்டையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மாதவனுக்கு ஆபரேஷன் நடந்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அவர் தன்னுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஷேர் செய்துள்ளார்.

வலது கையை உணரமுடியவில்லை

மாதவனின் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாதவனுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. ஆபரேஷனுக்கு பிறகு வலது கை இருப்பதையே உணர முடியவில்லை எனக் கூறியிருக்கிறார் மாதவன்.

English summary
Madhavan will be doing the role of karthik in 'Vinnaithaandi varuvaaya 2'. In this case, suddenly Madhavan undergoes surgery on his right shoulder.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil