»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

பீட்டா என்னும் சர்வதேச அமைப்பு சைவ உணவின் அவசியத்தையும், மனிதர்களின் இறைச்சித் தேவைக்காக ஆடு, மாடு, கோழி போன்ற பல பிராணிகள்பலியாக்கப்படுவதை எதிர்த்தும் பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்த அமைப்பின் இந்தியப் பிரிவு, நடிகர் மாதவனை வைத்து சைவ உணவின் அவசியத்தை வலியுறுத்தும் புகைப்படங்களை எடுக்க விரும்பியது. இதற்குமாதவனும் சரி என்று சொல்லி இருந்தார்.

அதன்படி கடந்த திங்கள்கிழமை (பிப்.4, 2002) மதியம் 1 மணிக்கு சென்னை தாஜ்கோரமண்டல் ஹோட்டலுக்கு மாதவன் வந்தார். அவரை 4 அடிஉயரம், 3 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட கூண்டுக்குள் அடைத்தனர்.

பிரபல புகைப்படக் கலைஞர் அதுல்கஸ்பேகர், கூண்டுக்குள் அடைபட்டிருந்த மாதவனை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்தார்.

அரை மணி நேரத்துக்கும் மேல் மாதவன் அந்தக் கூண்டில் இருந்தார். அப்போது அவர் கோழிகள் பரிதவிப்பதை போல் பாவனை செய்து காட்டினார்.

அதன் பின் வெளியே வந்த மாதவன் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:

இன்று உணவுக்காக கொல்லப்படும் கோழிகள், கோழிப்பண்ணைகளில் மோசமான நிலையில் அடைத்து வைக்கப்படுகின்றன. மரபு நீதியை மீறிகோழிகளை இனப்பெருக்கம் செய்கின்றனர்.

அவை இறைச்சிக்காகவும் கொல்லப்படுகின்றன. இத்தகைய நிலைமை கோழிக்கு மட்டுமல்ல எந்தப் பிராணிக்கும் ஏற்படக் கூடாது. சைவ உணவின்மூலம்தான் இது சாத்தியமாகும். எனவேதான் சிரமத்தையும் பாராமல் கூண்டுக்குள் அரை மணி நேரம் அடைபட்டுக் கிடந்தேன்.

நான் நடிப்புக்காகக் கூட அசைவத்தைத் தொட்டதில்லை. அதனால் தான் என்னை இதில் நடிக்கக் கேட்டவுடன் சம்மதம் தெரிவித்தேன்.

இதில் நடிப்பதற்காக சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்று கூறிச் சிரித்தார் மாதவன்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil