»   »  கமர்ஷியல் நெடி இல்லாத அழகிய மதுர நாரங்கா

கமர்ஷியல் நெடி இல்லாத அழகிய மதுர நாரங்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா கோடிகளில் குளித்துக் கொண்டிருக்கும் போது நமது அண்டை மாநிலமான மலையாள சினிமா தற்போது தான் லட்சங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

உலகத் தரத்திலான பல திரைப்படங்களை மலையாள சினிமா உருவாக்கியுள்ளது, கமர்ஷியல் நெடி எதுவும் இல்லாமல் வெளிவரும் மலையாள சினிமாக்கள் கேரள மக்களிடம் மட்டுமின்றி உலக அளவிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

Madhura Naranga Movie

அதற்கு சமீபத்திய உதாரணம் திரிஷ்யம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்த வரிசையில் கடந்த வாரம் வெளியாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்று வரும் மதுர நாரங்கா படத்தைப் பார்க்கலாம். படம் அரபு நாடுகளில் வேலைக்குச் செல்லும் இந்தியர்கள் எப்படி சூழ்நிலைக்கைதியாக மாறிப் போகிறார்கள் என்பதை வலியுடன் பதிவு செய்திருக்கிறது படம்.

ஷார்ஜாவில் கால்டாக்ஸி டிரைவராக நாயகன்

மதுர நாரங்கா படத்தின் நாயகன் குஞ்சாக்கோ போபன் ஷார்ஜா நாட்டில் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்க்கிறார், தனது நண்பர்களுடன் அறை எடுத்து ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்.

ஈழத்துப் பெண்ணாக நாயகி

ஈழத்து பெண்ணான நாயகி (பார்வதி ரத்தீஷ்) விபசாரத்தில் தள்ளப் பார்க்கும் தனது முதலாளியிடம் இருந்து, தப்பித்து ஷார்ஜாவிற்கு வருகிறார். வரும் இடத்தில் நாயகன் அடைக்கலம் கொடுக்கிறார்.

காதலில் விழுதல்

பார்வதிக்கு வேறு ஒரு பாஸ்போர்ட் ரெடி செய்து அனுப்பி வைக்க நினைக்கும் நாயகன், அதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபடும்போது நாயகி மீது காதல் கொள்கிறார்.காதலுக்கு அடையாளாமாக பார்வதியின் வயிற்றில் குழந்தை வளர்கிறது. குஞ்சாக்கோ போபன் தனது நண்பர்கள் முன்னிலையில் பார்வதியைத் திருமணம் செய்து கொள்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான ஆண்குழந்தை பிறக்கிறது.

நாயகன் - நாயகி- குழந்தையைப் பிரிக்கும் விதி

எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் விதி இவர்களின் வாழ்வில் விளையாடுகிறது. குஞ்சாக்கோ போபன் விபத்தில் சிக்கி பலத்த காயமடைகிறார், அதே நேரம் பார்வதியைக் கைது செய்யும் போலீசார் அவளைத் திரும்பவும் இலங்கைக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். குஞ்சாக்கோ போபனுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு அவரது மாமா அவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்து விடுகிறார். அனாதையாகிப் போன குழந்தை ஷார்ஜாவின் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுகிறது.

மூவரும் ஒன்று சேர்கிறார்களா?

நாயகன் இந்தியாவில், நாயகி இலங்கையில், குழந்தை ஷார்ஜா நாட்டில். இம்மூவரையும் வாழ்க்கையில் ஒன்று சேர்த்ததா விதி என்பதை அழுத்தமான காட்சிகளுடன் கிளைமாக்ஸில் கூறியிருக்கிறார் இயக்குநர் சுகீத்.( ஆர்டினரி என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர் சுகீத்தின் 2 வது படம் இது).

வெளிநாடுகளில் வேலை செய்யப்போகும் இந்தியர்கள் படும் அவலங்களை எடுத்துக் கூறியிருக்கிறது படம், எதார்த்த சினிமாக்களை வாழ்வியலோடு ரசிப்பவர்கள் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

English summary
Madhura naranga - starring Kunchacko Boban, Biju Menon, Parvathy Ratheesh in lead roles.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil