»   »  மாதுரி தீட்சித்துடன் அனில் கபூர்... மீண்டும் இணையும் பெர்ஃபெக்ட் ஜோடி!

மாதுரி தீட்சித்துடன் அனில் கபூர்... மீண்டும் இணையும் பெர்ஃபெக்ட் ஜோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : சினிமாவில் சிலரின் ஜோடிப் பொருத்தம் சிறப்பாகப் பேசப்படும். நாயகன் - நாயகி ஆகியோருக்கி இடையேயான கெமிஸ்ட்ரி உள்ளிட்ட இன்னும் சில விஷயங்கள் நன்றாகவே ஒர்க்-அவுட்டாகும். அப்படி ஒரு காலத்தில் பாலிவுட்டில் பேசப்பட்ட ஜோடி அனில் கபூர் - மாதுரி தீட்சித்.

அனில் கபூர் - மாதுரி தீட்சித் ஜோடி, 'ராம் லகான்', 'பெட்டா' உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் இணைந்து 'டோட்டல் தமால்' என்ற படத்தில் நடிக்கிறார்கள்.

Madhuri diixit again pairs with Anil kapoor

இதுகுறித்து அனில் கபூர், "மாதுரி உடன் நடிக்க மிகவும் ஆவலாய் உள்ளேன். நாங்கள் இருவரும் இணைந்து நிறைய படங்களில் நடித்தோம். ரசிகர்கள் எங்களது நடிப்பை வெகுவாக பாராட்டினார்கள், விரும்பினார்கள். சக நடிகை பற்றி நன்கு புரிந்து கொண்டவர்கள் மீண்டும் இணையும்போது சிறப்பாக இருக்கும். மீண்டும் நாங்கள் ரசிகர்களை மகிழ்விப்போம்" எனக் கூறியிருக்கிறார்.

அஜய் தேவ்கன், ரித்தீஷ் தேஷ்முக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் 'டோட்டல் தமால்' திரைப்படத்தை இந்திர குமார் இயக்கி வருகிறார். இந்தப் படம் இந்த ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The strong chemistry between Anil Kapoor - Madhuri Dixit in Bollywood. Anil Kapoor - Madhuri Dixit pair have played together in a number of films like 'Ram Lakhan' and 'Betta' . They both act after a long break and then star in 'Total Dhamaal'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X