»   »  'அம்மாவுக்கு பதிலாக மாதுரி தீட்சித்..' - ஶ்ரீதேவி மகள் இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு!

'அம்மாவுக்கு பதிலாக மாதுரி தீட்சித்..' - ஶ்ரீதேவி மகள் இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீதேவியின் மகள் பப்லிசிட்டிக்காக எதையும் பண்ணுவாங்க- வீடியோ

சென்னை : பாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மன் இயக்கத்தில் உருவாகும் ஷிட்டட் படத்தில், நடிகை ஸ்ரீதேவிக்கு பதில் மாதுரி தீட்சித் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

கரண் ஜோஹர் தயாரிப்பில், பாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மன், தற்போது ஷிட்டட் என்ற படத்தை இயக்க உள்ளார்.

இந்தப் படத்தில் ஶ்ரீதேவி நடிக்கவிருந்தார். அவர் திடீரென காலமானதையடுத்து, அந்த வேடத்தில் மாதுரி தீட்சித் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.

மீண்டும் தொடக்கம்

மீண்டும் தொடக்கம்

இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஶ்ரீதேவி இறந்துவிட, படத்தை கைவிட்டதாக படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது, ஷிட்டட் படத்தில் நடிகை ஶ்ரீதேவிக்கு பதிலாக, மாதுரி தீட்சித் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜான்வி கபூர்

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் மூலம் ஶ்ரீதேவிக்கு பதிலாக மாதுரி தீட்சித் நடிக்கும் தகவல் உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மிகுந்த நன்றி

மிகுந்த நன்றி

"அபிஷேக் வர்மனின் இந்தப் படம் என் அம்மாவின் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இந்தப் படத்தில் அம்மாவிற்கு பதிலாக மாதுரி தீட்சித் நடிப்பதற்கு நான், தங்கை குஷி மற்றும் எனது தந்தை ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

English summary
Madhuri Dixit is to replace Sridevi's character in bollywood director Abhishek varman's next film. Sridevi's daughter Janhvi kapoor announced this on instagram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X