»   »  பாகுபலி 2 படத்தில் நடிக்கத் துடிக்கும் மாதுரி தீக்சித், பாலிவுட் பிரபலங்கள்

பாகுபலி 2 படத்தில் நடிக்கத் துடிக்கும் மாதுரி தீக்சித், பாலிவுட் பிரபலங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாகுபலி 2 படத்தில் நடிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்படுகிறாராம் பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித்.

எஸ்.எஸ். ராஜமவுலி பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா உள்ளிட்டோரை வைத்து எடுத்த பாகுபலி படம் உலக மக்களை தெலுங்கு திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தது. பாகுபலி உலக அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை பார்த்து பாலிவுட்காரர்கள் மிரண்டு போயுள்ளார்கள்.


என்னமா படம் எடுத்திருக்கிறார் ராஜமவுலி என்று அவர் வியந்து கொண்டிருக்கையில் தான் அந்த செய்தி வெளியானது.


பாகுபலி 2

பாகுபலி 2

ராஜமவுலி பாகுபலி இரண்டாம் பாகத்தை எடுப்பதாக அறிவித்தது பாலிவுட்காரர்கள் காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது. அதற்கு காரணம் உண்டு.


பாலிவுட்

பாலிவுட்

பாகுபலி 2 படத்தில் பாலிவுட் பிரபலங்களை நடிக்க வைத்தால் இந்தியில் மேலும் மவுசு அதிகரிக்கும் என்பது அவர்களின் கணக்கு.


கரண் ஜோஹார்

கரண் ஜோஹார்

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் ராஜமவுலியை அணுகி பாகுபலி 2 படத்தில் இந்தி நடிகர், நடிகைகளையும் நடிக்க வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம்.


மாதுரி தீக்சித்

மாதுரி தீக்சித்

பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித் பாகுபலி 2 படத்தில் நடிக்க வாய்ப்பு பெறுவதில் குறியாக உள்ளார் என்று கூறப்படுகிறது. அவ்வாறு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டால் அனுஷ்காவின் அக்காவாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.


English summary
Buzz is that bollywood celebs including Madhuri Dixit are keen in getting a role in Rajamouli's Baahubali 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil