»   »  விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக இணைந்த 'பிரேமம்' நாயகி!

விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக இணைந்த 'பிரேமம்' நாயகி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஜுங்காவில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா!

சென்னை : 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ஜுங்கா' படத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன் இணைந்திருக்கிறார்.

மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற 'பிரேமம்' படத்தில் செலின் எனும் கேரக்டரில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த மடோனா செபாஸ்டியன், தமிழில் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'காதலும் கடந்து போகும்' படத்தில் அறிமுகமானார்.

Madonna sebastian joins with vijay sethupathi again

அந்தப் படத்துக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்' திரைப்படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். தற்போது, மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார் மடோனா செபாஸ்டியன்.

கோகுல் இயக்கிவரும் 'ஜுங்கா' படத்தில், வெளிநாட்டில் வசிக்கும் டானாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்திற்காக வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக 'வனமகன்' சாயிஷா சைகல் நடிக்க, இன்னொரு ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.

தனுஷ் இயக்கி, நடித்த 'ப.பாண்டி' படத்தில் தனுஷ் ஜோடியாகவும் நடித்திருந்தார் மடோனா. விஜய் சேதுபதியின் 'ஜுங்கா' படத்தின் ஷூட்டிங் சினிமா ஸ்ட்ரைக்கை மீறி வெளிநாடுகளில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Malayalam actress Madonna sebastian to pair up with Vijay sethupathi in 'Junga' movie directed by Gokul.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X