For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ராஜிவின் மரணத்துக்கு புலிகள் மட்டுமே காரணமா?.. மெட்ராஸ் கஃபே புதைத்த நிஜங்கள்!

  By Mathi
  |

  மும்பை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மரணத்துக்கு விடுதலைப் புலிகள் காரணம் என்று சொல்லும் மெட்ராஸ் கஃபே திரைப்படம், நிஜங்கள் பலவற்றையும் புதைத்திருக்கிறது என்று மூத்த அரசியல் பார்வையாளர் தவ்லீன்சிங் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

  இது தொடர்பாக http://www.niticentral.com இணையதளத்தில் தவ்லீன்சிங் எழுதியுள்ளதன் சுருக்கம்:

  (Madras Cafe brings back memories)

  மெட்ராஸ் கஃபே திரைப்படம் தொடங்கிய உடனேயே ராஜிவ் காந்தி கொலைக்குக் காரணமான நிகழ்வுகளை விவரிக்கும் திரைப்படம் இது என்பதை வெளிப்படுத்திவிடுகிறது. இலங்கையில் தனிநாட்டுக்கான தமிழர்களின் போராட்டம், காடுகளில் தமிழ் புலிகளின் தலைமையகத்தின் செயல்பாடுகள் பற்றியெல்லாம் சொல்லுகிறது இத்திரைப்படம். வேலுப்பிள்ளை பிரபாகரனாக நடித்திருப்பவர் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் இந்தப் படம் என்னை வருத்தப்படவும் வைத்தது.

  Madras Cafe brings back memories

  மிக முக்கியத்துவமான வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்று சொன்னாலும் உண்மையான வரலாற்றை சொல்லத் தவறிவிட்டது. இலங்கை தொடர்பான தங்களது நிலைப்பாட்டை ராஜிவ் காந்தி பின்பற்றினால் அது அவரது உயிருக்கு மிகவும் ஆபத்து என்று தெரிந்தே இருந்த இந்திய அதிகாரிகள் எப்படியெல்லாம் ராஜிவுக்கு துரோகம் இழைத்தனர் என்பதை லேசாக தொட்டுச் செல்கிறது படம். இன்னும் சற்று கூடுதலாக ஆராய்ந்திருந்தால் எப்படியெல்லாம் இலங்கை விவகாரத்தில் தலையிட்ட இந்திய அதிகாரிகள், விடுதலைப் புலிகள் போன்ற குழுக்களை அரவணைத்துக் கொண்டே ராஜிவுக்கு துரோகம் இழைத்தனர் என்பதை சொல்லியிருக்க முடியும்.

  ராஜிவ்காந்தி பிரதமராக இருந்த போது டெல்லி அசோகா ஹோட்டலில் தங்கியிருந்த பிரபாகரன் மற்றும் தமிழ் தீவிரவாதிகளை தனிப்பட்ட முறையில் சந்தித்த தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. ராஜிவ் காந்தியைப் பொறுத்தவரையில் சர்வதேச அரசியலை அவ்வளவாக அறிந்தவர் அல்ல. இதனால் அவர் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளின் ஆலோசனைகளை எதிர்பார்த்திருந்தார். இந்த ஆலோசனைகளால்தான் தமிழ் தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்ற நிலையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க ராணுவத்தை அனுப்பும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டார்.

  அப்படி ராஜிவ்காந்தி அனுப்பிய வீரர்கள், அமைதிப் படை என்ற பெயரில் கைகளை பின்புறமாக கட்டி அனுப்பி வைக்கப்பட்டவர்கள்.. இதனாலேயே 1500 இந்திய வீரர்கள் உயிரிழக்க நேரிட்டது. ஏனெனில் அந்த யுத்தமானது படு குழப்பமானது..நிச்சயம் வெற்றிபெற முடியாதது.. அதுதான் ராஜிவ் காந்தியின் வாழ்க்கை முடிந்துபோனதற்கு உண்மையான காரணமும் கூட. ஆனால் மெட்ராஸ் கஃபே திரைப்படம் அதைப் பற்றியெல்லாம் சொல்லவே இல்லை..

  இதற்கு மாறாக மேற்கத்திய நாடுகள் தங்களது சொந்த ராணுவ- வணிக நலன்களுக்காக இலங்கையை தங்கள் வசமாக்கிக் கொள்ள முயல்வதாகவும், தங்களது நலன்களுக்காக இந்தியாவை பலவீனப்படுத்தவே தலையிட்டதாகவும் சொல்கிறது மெட்ராஸ் கஃபே.

  உண்மை என்னவெனில் இந்திரா காந்தி காலத்தில் இருந்தே இலங்கையின் விவகாரங்களில் இந்தியா தலையிடத் தொடங்கிவிட்டது. இலங்கையை தெற்காசியாவின் சிங்கப்பூராக மாற்றுவதற்காக தாராளமய பொருளாதார கொள்கைகளை ஜெயவர்த்தனா அறிமுகப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்திரா காந்தி ஏற்கவில்லை. இந்திய மண்ணில் எப்படி பாகிஸ்தானின் ஜிஹாதி அமைப்புகள் தற்போது எப்படி இயங்குகின்றனவோ அதுபோலத்தான் அன்று இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியாவும் தலையிட்டது. இதனது தொடர்ச்சிதான் ராஜிவ்காந்தி உயிரிழக்க நேரிட்டது. மேலும் டெல்லி செங்கோட்டை சுவர்களுக்குள் புதைக்கப்பட்ட பல கோரமான துரோகங்களும் உண்மை கதைகளும் பாலிவுட் திரைப்படங்களால் சொல்வதற்கான நேரம் இன்னமும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

  ஓ மெட்ராஸ் கஃபே புதைத்த நிஜங்கள் இதுவோ?

  English summary
  The Writter Tavleen Singh wrote on the Madras Cafe film "From the very first few moments of the film it became clear that it was about the events that led to the assassination of Rajiv Gandhi.What saddened me was that the film was that in fictionalising important historical events it failed to tell a story that would have been more compelling had it been historically accurate." in www.niticentral.com.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more