»   »  நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: நடிகர் தனுஷை தங்கள் மகன் என உரிமை கொண்டாடி மதுரையைச் சேர்ந்த தம்பதிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை.

நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூரைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் சில ஆண்டுகளுக்கு முன் வழக்குத் தொடர்ந்தனர்.

Madurai court dismisses case against Dhanush

இந்த வழக்கு பொய்யானது, ஆதாரமற்றது என தனுஷ், அவரது பெற்றோர் இயக்குநர் கஸ்தூரிராஜா - விஜயலட்சுமி ஆகியோர் வாதிட்டனர். அதற்கான ஆதாரங்கள் பலவற்றையும் காட்டினர். ஆனாலும் தொடர்ந்து ஆண்டுக் கணக்கில் இந்த வழக்கு நடந்தது.

வழக்கில் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என மதுரை நீதிமன்றத்தில்கதிரேசன் தம்பதியர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்பது தொடர்பாக வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்தார் நீதிபதி.

English summary
The Madurai branch ofMadras High Court has dismissed case filed against actor Dhanush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X