»   »  மனைவி இறந்த 6 மாதத்தில் புதுமாப்பிள்ளையான மதுரை முத்து: காரணம் இருவர்

மனைவி இறந்த 6 மாதத்தில் புதுமாப்பிள்ளையான மதுரை முத்து: காரணம் இருவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: நகைச்சுவை நடிகர் மதுரை முத்து தனது மனைவி இறந்த 6 மாதத்தில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் மனைவி வையம்மாள்(32) கடந்த பிப்ரவரி மாதம் கோவிலுக்கு காரில் சென்றபோது சாலை விபத்தில் சிக்கி பலியானார். இதனால் மனமுடைந்த முத்து இனி சாமியே கும்பிட மாட்டேன் என்றார்.

என் மனைவி தான் இனி என் தெய்வம் என உருக்கமாக தெரிவித்தார்.

சோகம்

சோகம்

மனைவி கனவில் வர வேண்டி அவரின் சேலையை போர்த்திக் கொண்டு தூங்கியதாக முத்து சமூக வலைதளத்தில் தெரிவித்தார். மனைவி தன்னுள் தெய்வமாக வாழ்கிறாள் என்று ஃபீல் பண்ணினார் முத்து.

பாவம்

பாவம்

மதுரை முத்து ஃபேஸ்புக்கில் தனது மனைவியை நினைத்து புலம்பியதை பார்த்த ரசிகர்கள் கடவுளே இந்த மனுஷனுக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம் என கவலை அடைந்தனர்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

மனைவியை நினைத்து நினைத்து உருகிய முத்து அவர் இறந்த 6 மாதத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தனது மனைவியின் நெருங்கிய தோழியான நீத்தியையே மணந்தார் முத்து.

மகள்

மகள்

படப்பிடிப்பு, நிகழ்ச்சிகள் என தான் ஊர், ஊராக, நாடு நாடாக சுற்றிக் கொண்டிருக்கும்போது 2 மகள்களையும், வயதான பெற்றோரையும் பார்த்துக் கொள்ளவே இரண்டாவது திருமணம் செய்தாராம் முத்து. நீத்தியும் தனது தோழியின் பிள்ளைகளை தனது பிள்ளைகளாகவே கருதுவதால் தான் பாக்கியசாலி என முத்து தெரிவித்துள்ளார்.

English summary
Actor Madurai Muthu has remarried six months after his wife died in a road accident. He married again just for his daughters' sake.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil