twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெர்சல் டிக்கெட்: விஷால் முடிவுக்கு எதிராக செயல்படும் மதுரை, நெல்லை விநியோகஸ்தர்கள்?

    By Shankar
    |

    சென்னை: தமிழ் திரைப்பட துறையினர் தொடர் போராட்டம், அரசுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை முடிவில் தியேட்டர் கட்டணம் உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டது.

    பதினோரு ஆண்டுகளுக்கு பின் அரசால் மாற்றி அமைக்கப்பட்ட விலையில் மட்டுமே தியேட்டர்களில் டிக்கட் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதை அமுல்படுத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் முயற்சி எடுத்தார். இதனை பகிரங்கமாக பொது வெளியில் அறிவிப்பாகவும் வெளியிட்டார்.

    Madurai, Nellai distributors against Vishal

    தீபாவளி வெளியீடாக வரும் 'மெர்சல்' படத்திற்கு இதனை நடைமுறைப்படுத்த அப்படத்தின் தயாரிப்பாளர் முரளி மற்றும் அப்படம் சார்ந்த வினியோகஸ்தர்கள், தியேட்டர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தலைவர் விஷால் பேசிய போது நியாயமான கட்டணத்தில் டிக்கட் விற்பனை செய்தால் படம் பார்க்க குடும்பங்களோடு மக்கள் வருவார்கள். இதனால் அதிக நாட்கள் படம் ஓடும் என்றார்.

    மெர்சல் படத்திற்கு தியேட்டர்கள் தயாரிப்பாளருடன் போடப்பட்ட ஒப்பந்தபடி தொகையை அனைவரும் கொடுக்க வேண்டும். எம்.ஜி என்கிற முறையில் படம் திரையிடுவதால் அதிகபட்ச விலைக்கு டிக்கட் விற்கப்படுவது ஒழிக்கப்பட வேண்டும். இது தமிழ்நாடு முழுவதும் அமுல்படுத்த பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

    Madurai, Nellai distributors against Vishal

    இதனைக் கண்காணிக்க ஒவ்வொரு விநியோக பகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தயாரிப்பாளர்கள் சங்கம் அமல்படுத்த முயற்சிக்கும் இம் முடிவை அமல்படுத்தப் போவதில்லை என்று மெர்சல் படத்தின் மதுரை, திருநெல்வேலி பகுதி விநியோகஸ்தர்கள் முடிவெடுத்துள்ளார்களாம்.

    மதுரை ஏரியாவில் 6.75 கோடிக்கு எம்.ஜி அடிப்படையில் தியேட்டர் உரிமையாளர்களுடன்
    மெர்சல் பட விநியோகஸ்தர் ஒப்பந்தம் போட்டிருந்தார்.

    தயாரிப்பாளர்கள் சங்க முடிவின்படி இதனை அட்வான்சாக மாற்ற முடியாது. எம்.ஜி அடிப்படையில்தான் மெர்சல் திரையிட வேண்டும்.

    வழக்கம் போல அத்தொகை வசூலாக உங்கள் விருப்பபடி டிக்கட்டை அதிக விலைக்கு விற்றுக் கொள்ளுங்கள் என மதுரை, நெல்லை ஏரியா விநியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்களிடம் கூறியுள்ளார்.

    Madurai, Nellai distributors against Vishal

    தயாரிப்பாளர்கள் சங்க முடிவை அமுல்படுத்தவும், அதனைக் கண்காணிக்கவும் மதுரை பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செல்வின் ராஜ் கவனத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் பிரச்சினையை கொண்டு சென்றபோது சென்னை முடிவு இங்கு செல்லுபடியாகாது என கூறியதாக தெரிகிறது.

    இதே நிலைதான் திருநெல்வேலி ஏரியாவிலும். தமிழகம் முழுவதும் ஒரு அரசு ஆணையை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் அமல்படுத்த முயற்சிக்கும் போது அதனை முறியடிக்க மெர்சல் படத்தின் மதுரை, திருநெல்வேலி விநியோகஸ்தர்கள் தீவிரமாக இருப்பது தியேட்டர் உரிமையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Madurai, Nellai distributors against Vishal

    மதுரை, நெல்லை ஏரியாவில் அநியாய விலைக்கு டிக்கட் விற்க வேண்டிய சூழலை விநியோகஸ்தர்களே ஏற்படுத்தி உள்ளனர். இதனைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பாளராக இருக்கும் செல்வின் ராஜ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். அவரே இந்த அத்துமீறலுக்கு மறைமுகமாக துணை போகிறாரோ என தியேட்டர் உரிமையாளர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

    இந்த அத்துமீறலை விஷால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கையாக உள்ளது.

    English summary
    The Madurai and Nellai distributors of Mersal forced theaters to sel Mersal tickets morethan the govt fixed price.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X