»   »  விடிந்தும் விடியாமலும் மகனை மதுரவீரனாக்கிய விஜயகாந்த்

விடிந்தும் விடியாமலும் மகனை மதுரவீரனாக்கிய விஜயகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரவீரன் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சகாப்தம் படம் மூலம் ஹீரோவானவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன். சகாப்தம் படப்பிடிப்பை விஜயகாந்தும், பிரேமலதாவும் உடன் இருந்து பார்வையிட்டனர்.

இப்படி பார்த்து பார்த்து எடுத்த படம் ஓடவில்லை.

மதுரவீரன்

மதுரவீரன்

வெற்றி, தோல்வி எல்லாம் சகஜமப்பா என்று மகனை தேற்றி மதுரவீரன் படத்தில் நடிக்க வைக்கிறார் விஜயகாந்த். இந்த படத்தை ஒளிப்பதிவாளராக இருந்த பி.ஜி. முத்தையா இயக்குகிறார்.

பூஜை

#மதுரவீரன் திரைப்பட பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. #MaduraVeerans என்று கூறி இன்று நடந்த பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.

சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

மதுரவீரன் படம் மூலம் முத்தையா இயக்குனர் ஆகியுள்ளார். இந்த படத்தில் நடிப்புக்கு பெயர் போன சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஹீரோயின்

ஹீரோயின்

சண்முகப் பாண்டியனின் ஹீரோயின் யார் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. பிற நடிகர்கள், நடிகைகள் குறித்த விபரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Shanmuga Pandian starrer Maduraveeran movie poojai was performed on monday. The hero's father Vijayakanth took to twitter to announce this.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil