»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

விபச்சார வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள நடிகை மாதுரி நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில்நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

சென்னை-சைதாப்பேட்டை நான்காவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த விபச்சார வழக்கு தொடர்பானவிசாரணை நடந்து வருகிறது.

மாதுரியைக் கையும் களவுமாகப் பிடிப்பதற்காகப் போலீசாரால் பணம் கொடுத்து அனுப்பப்பட்ட ஆட்டோடிரைவர் கிருஷ்ணன் முதல் நாள் விசாரணையின்போது சாட்சியம் அளித்தார். அவர் தன் சாட்சியத்தில்,

நான் மாதுரியின் வீட்டுக்குச் சென்றேன். அப்போது அவர் என்னை விபச்சாரம் செய்ய அழைத்தார்.

உடனே நான் எவ்வளவு பணம் வேண்டும் என்றேன். ரூ.2,000 வேண்டுமென்று மாதுரி கேட்டார்.

இதையடுத்து ரூ.1,000 மட்டும் அவரிடம் கொடுத்து விட்டு, மீதிப் பணத்தை எடுத்துக் கொண்டு வருவதாகமாதுரியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றேன்.

இதன் பின்னரே மாதுரியின் வீட்டுக்குள் போலீசார் சென்று அவரைக் கைது செய்தனர் என்றார் கிருஷ்ணன்.

இதைத் தொடர்ந்து நீதிபதி ஜெயபாலன் உத்தரவின் பேரில் கிருஷ்ணனிடம் குறுக்கு விசாரணை செய்தார் மாதுரிதரப்பு வக்கீல்.

பாதி விசாரணை வரை நடத்திய மாதுரியின் வக்கீல், மீதி விசாரணை நடத்த கால அவகாசம் வேண்டுமென்றுகேட்டார். அதற்கு அனுமதி தர நீதிபதி ஜெயபாலன் மறுத்தார்.

விசாரணை முடியும் வரை குற்றவாளிக் கூண்டிலேயே நின்று கொண்டிருந்தார் மாதுரி. பின்னர் இந்த வழக்குதொடர்பான விசாரணை டிசம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil