»   »  இசைஞானி இளையராஜாவின் 73 வது பிறந்த நாள்... ரசிகர்கள் நேரில் வாழ்த்தலாம்!

இசைஞானி இளையராஜாவின் 73 வது பிறந்த நாள்... ரசிகர்கள் நேரில் வாழ்த்தலாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இசைஞானி இளையராஜாவின் 73 வது பிறந்த நாளையொட்டி 'மேஸ்ட்ரோ மியூசிக் செயலி' அவருக்கு காமராஜர் அரங்கில் நாளை இசைத் திருவிழா நடத்துகிறது. ரசிகர்கள் நேரடியாகப் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவும் பங்கேற்கிறார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய திரையிசையின் மகத்தான் இசைக் கலைஞராகத் திகழ்பவர் இசைஞானி இளையராஜா. நாளை ஜூன் 2-ம் தேதி அவரது பிறந்த நாளாகும்.

Maestro Ilaiyaraaja's Birthday special arrangements

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இளையராஜா இசைக்காக மேஸ்ட்ரோ மியூசிக் என்ற ஒரு மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துள்ள ரசிகர்கள், நாளை காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை சென்னை காமராஜர் அரங்குக்கு சென்று இளையராஜாவை நேரில் வாழ்த்தலாம்.

பிற்பகலில் டாக்டர் கு ஞானசம்பந்தன் தலைமையில், இசைஞானியின் இசை செவியோடு கலப்பதா? உயிரோடு கலப்பதா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டி மன்றம் நடக்கிறது.

மாலை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் இசைக் கலைஞர்கள் பங்கு பெறும் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

English summary
Maestro Music App is making special arrangements to celebrate Maestro Ilaiyaraaja's Birthday tomorrow.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil