»   »  புதிய உற்சாகத்துடன் இசைப் பணியைத் தொடங்கினார் இளையராஜா!

புதிய உற்சாகத்துடன் இசைப் பணியைத் தொடங்கினார் இளையராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி, சில தினங்கள் ஓய்வுக்குப் பிறகு புதிய உற்சாகத்துடன் இசைப் பணியைத் தொடங்கினார் இசைஞானி இளையராஜா.

இசைஞானி இளையராஜா கடந்த சில வாரங்களுக்குமுன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய இளையராஜா, மருத்துவர்களின் ஆலோசனையின்படி ஒருவாரம் கட்டாய ஓய்வில் இருந்தார்.

மலேசிய ரசிகர்களுக்காக

மலேசிய ரசிகர்களுக்காக

இதனால் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இருந்தும் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக வீடியோ கான்பரன்ஸ் மூலம் தோன்றி ரசிகர்களுக்கு மகிழ்வைத் தந்தார்.

பூரண நலம்

பூரண நலம்

தற்போது பூரண நலம்பெற்று மீண்டும் தன் இசை பயணத்தை தொடங்கிவிட்டார் ராஜா. மருத்துவர்கள் சொன்னதற்காகத்தான் அவர் கட்டாயமாக வீட்டிலிருந்தாரே தவிர, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதிலிருந்தே அவர் பிரசாத் ஸ்டுடியோவுக்கு போக வேண்டும் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தாராம்.

ஞாயிறன்று கூட...

ஞாயிறன்று கூட...

அதன் விளைவு, ஞாயிற்றுக் கிழமையே பாட்டிசைக்கக் கிளம்பிவிட்டார் ராஜா. கவிஞர் சினேகன் நடிக்கும் ராஜராஜ சோழனின் போர்வாள் திரைப்படத்திற்காக ஒரு பாடலை பிரசாத் தியேட்டரில் அன்று உருவாக்கினார். இன்று திங்கள்கிழமை அந்தப் பாடலுக்கான குரல் பதிவு நடக்கிறது.

ராஜராஜ சோழனுக்குப் பெருமை

ராஜராஜ சோழனுக்குப் பெருமை

இசைஞானி உடல்நலம் பெற்று திரும்பியபின் பதிவு செய்யும் முதல் பாடல், 2014ல் இசைஞானியால் பதிவு செய்யப்படும் முதல் பாடல் என்ற பெருமையுடன் தயாராகிறது ராஜராஜ சோழனின் போர்வாள்!

இந்தப் படத்துக்காக கரூரில் உள்ள ராஜராஜசோழனின் குரு கருவூரார் சந்நிதிக்குப் போன இளையராஜா, மக்கள் முன் பாடலை உருவாக்கியது நினைவிருக்கலாம்.

English summary
Maestro Ilayaraja is resuming his work at Prasad Studio and recovering health issues.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil