»   »  என் மகளை புல்லட்டில் போய் பள்ளியில் விட்டேன்... பெருமையா இருந்துச்சி! - ஜோதிகா

என் மகளை புல்லட்டில் போய் பள்ளியில் விட்டேன்... பெருமையா இருந்துச்சி! - ஜோதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருமணமாகி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார் ஜோதிகா. 2015-ம் ஆண்டு அவர் நடித்த 36 வயதினிலே படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

அடுத்து இப்போது மகளிர் மட்டும் படம். இந்தப் படம் விரைவில் வரவிருக்கிறது. படத்தில் நடித்தது குறித்து ஜோதிகாவின் பேட்டி இது.

மாமியார் - மருமகள்

மாமியார் - மருமகள்

"மகளிர் மட்டும் ரோட் ட்ரிப்பில் ஒன்றில் மருமகள் ஒருத்தி தன்னுடைய மாமியாரையும் அவருடைய நண்பர்களையும் எப்படி பார்த்துக்கொள்கிறார் என்பதுதான் கதை...

இந்த கதை எப்படி ஒரு ஆணிடம் இருந்து வந்தது என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரோடு இணைந்து நடிக்கும் போது சிறிது பயமாக இருந்தது.

வசனம் பேச முடியவில்லை

வசனம் பேச முடியவில்லை

எங்கள் முதல் நாள் படபிடிப்பு ஒரு படகில் வைத்து நடைபெற்றது. அப்போது என்னால் சரியாக வசனத்தை கூறி நடிக்க முடியவில்லை. அப்போது அவர்கள் மூவரும் தான் என்னை சஜகமாக்கினார்கள். நான் ஊர்வசியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

புல்லட் ஓட்ட பயிற்சி

புல்லட் ஓட்ட பயிற்சி

நான் படத்தில் புல்லட் ஓட்டி நடிக்க வேண்டிய ஒரு காட்சி இருந்தது. எனக்கு சூர்யா 2 நாட்கள் புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார். அதன் பிறகு மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ஷீபா என்ற பயிற்சியாளர் ஒருவர் எனக்கு புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார். நான் என் மகள் தியாவை பள்ளிக்கு புல்லட்டில் அழைத்து சென்று டிராப் செய்தபோது அவளுக்கு பெருமையாக இருந்தது.

சூர்யாதான் ஹீரோ

சூர்யாதான் ஹீரோ

மகன் தேவுக்கு சூர்யாதான் எப்போதும் ஹீரோ.... நாச்சியார் படத்தின் மூலம் நான் தேவுக்கு ஹீரோவாக தெரிவேன் என்று நம்புகிறேன். நான் தற்போது சூர்யாவோடு ரெகுலராக ஜிமுக்க்கு சென்று வருகிறேன். நான் என்னோடு நடித்த சக நடிகர்களை விட ஐந்து வயதாவது இளமையாக தெரிவேன் என்று நம்புகிறேன்.

பெண் எழுத்தாளர்கள்

பெண் எழுத்தாளர்கள்

பெண் எழுத்தாளர்களுக்கு யாரும் தற்போது முக்கியம்துவம் கொடுப்பதில்லை. இயக்குநர் சுதா கொங்காராவுக்கு மாதவன் வாய்ப்பு கொடுத்தது நல்ல விஷயம். அவர் வாய்ப்பு கொடுத்ததால்தான் இறுதிசுற்று என்று ஒரு படம் வெளிவந்து வெற்றிபெற்றது. இந்த நிலை மாற வேண்டும். பெண் எழுத்தாளர்கள் யாரும் அறியாத ஹீரோக்கள்," என்றார் ஜோதிகா.

பிரம்மா

பிரம்மா

36 வயதினிலே படத்தை எழுதி இயக்கியுள்ளார் பிரம்மன். இவர் குற்றம் கடிதல் படத்துக்காக தேசிய விருது பெற்றவர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படம் அடுத்த வாரம் வெளியாகிறது.

English summary
Jyothika is sharing her Magalir Mattum movie experience

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil