Just In
- 10 min ago
ஃபைனலிஸ்ட்டுகளுக்கு பரிசு கொடுத்த கமல்.. வேற லெவல்.. யார் யாருக்கு என்னன்னு பாருங்க!
- 44 min ago
சிரி ரியோ.. எல்லோரையும் ஹேப்பி பண்ணிட்டு வரணும்.. ஆர்டர் போட்ட ஸ்ருதி.. கமலுடன் உரையாடிய ரியா!
- 55 min ago
ஃபினாலேவுக்குள் முதல் ஆளாய் சென்று.. முதல் ஆளாய் எவிக்ட்டான சோம்.. டிவிஸ்ட் வைத்த முகேன்!
- 1 hr ago
பேசத் தயங்கிய அனிதா.. கமல் முன்பு மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய அர்ச்சனா.. மத்தவங்க என்ன சொன்னாங்க!
Don't Miss!
- News
குடியரசுத் தின கொண்டாட்டத்திற்கு சிறு பாதிப்பும் ஏற்படாது... அமைதியான முறையில் பேரணி -விவசாயிகள்
- Finance
வரியை குறைக்க வேண்டும்.. பட்ஜெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.. கைகொடுக்குமா பட்ஜெட் 2021..!
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மகா தீபத்தை தரிசித்த இளையராஜா.. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் சாமி தரிசனம்!
சென்னை: திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்தார் இசையமைப்பாளர் இளையராஜா.
கார்த்திகை தீபத் திருவிழா தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகமெங்கும் வீடுகளை விளக்குகளால் அலங்கரித்தும் பட்டாசு வெடித்தும் மக்கள் கார்த்திகை தீபத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
செம க்யூட்டா இருக்கீங்க.. அதுல்யா வெளியிட்ட அழகு போட்டோக்கள்.. சொக்கித் தவிக்கும் ரசிகர்கள்!

மகா தீபம்
கார்த்திகை மாதம் என்றாலே தமிழ்க் கடவுள் முருகனுக்கு உகந்த மாதம். அக்னி ஸ்தலமாக இருக்கும் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றி வழிபடுவதை தொன்று தொட்டு செய்து வருகின்றனர். கொரோனா காலம் என்பதால், வெளி மாவட்ட மக்களுக்கு இம்முறை அனுமதி வழங்கப்படவில்லை.

வீடுகளில் விளக்கேற்றி
தமிழகமெங்கும் வீடுகளை மக்கள் விளக்குகளால் அலங்கரித்து கார்த்திகை தீபத் திருவிழாவை கொண்டாடினர். இன்னொரு தீபாவளியாக பட்டாசுகளை வெடித்து, புத்தாடைகளை உடுத்தி ஒளிக் கடவுளை மக்கள் வணங்கி வருகின்றனர். திருவண்ணாமலை செல்ல முடியாத மக்கள் டிவியிலேயே நேரலையில் மகா தீபத்தை கண்டு வழிபட்டனர்.

திருவண்ணாமலையில் இளையராஜா
மகா தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை சென்ற இசையமைப்பாளர் இளையராஜா மகா தீபத்தையும் அண்ணாமலையாரையும் தரிசித்துள்ளார். இளையராஜா திருவண்ணாமலையில் சாமி தரிசனம் மேற்கொண்ட நிலையில், அவரது புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

பக்தி அதிகம்
இளையராஜாவுக்கு இறை நம்பிக்கையில் அதிக ஈடுபாடு உண்டு. ஏகப்பட்ட கடவுள் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். அக்னி லிங்கம் என திருவண்ணாமலைக்கு ஸ்பெஷல் ஆல்பமே போட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைந்த போதும் திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டது குறிப்பிடத்தக்கது.