Kumbh Mela Monalisa: மலையாள சேச்சியாக மாறப்போகும் கும்பமேளா மோனாலிசா.. படம் சீக்கிரமே ரிலீஸ்!
கொச்சி: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளா, உலகம் முழுவதும் பேசு பொருளாக மாறியது என்றால், அங்கு பாசிகள் விற்றுக் கொண்டு இருந்த மோனாலிசாவும் இந்திய அளவில் புகழ் பெற்றார். அவரது வசீகரமான கண்கள் அவரை இணைய உலகத்தில் ஒரே நாளில் ட்ரெண்ட் ஆக்கியது.
கும்பமேளா விழாவின் போது, மோனாலிசாவின் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி அவரை வைரல் ஆக்கியது. அதன் பின்னர் அவரது புகைப்படத்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல இணையவாசிகள் வேறு வேறு படங்களை உருவாக்கி இணையத்தில் பகிர்ந்தனர். குறிப்பாக இணையவாசிகள் தாங்களாகவே உருவாக்கி பகிர்ந்த புகைப்படங்களில் படத்தில் அவர் மாடர்ன் ஆடைகளில் இருப்பது போல இருந்தது. அதன் பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் வரவே, அவருக்கு பட வாய்ப்பு கொடுக்க முன் வந்தவர்கள், லுக் டெஸ்ட், மேக்-அப் டெஸ்ட் உள்ளிட்டவற்றை எடுத்தார்கள்.

அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரை மேலும் வைரலாக்கியது. மேற்கத்திய ஆடை அணிந்து, சுருண்ட கூந்தலுடன், அதிக மேக்கப்புடன் காட்சியளிக்கிறார். இது அவரது வழமையான கிராமப்புற தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. பலர் இந்த மாற்றத்தைப் பார்த்து வியப்படைந்து உள்ளனர்.
வசீகரமான கண்கள்: மோனாலிசா தனது கவர்ச்சிகரமான கண்களுக்காகவும், வசீகரமான புன்னகைக்காகவும் கும்பமேளாவில் பிரபலமடைந்தார். அவரது பழுப்பு நிற கண்கள் பலரையும் கவர்ந்தன. பிரயாக்ராஜ் கும்பமேளாவில் மாலைகள் விற்க வந்த மோனாலிசா, தான் இவ்வளவு பிரபலமாவார் என்று ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்.
மலையாள படம்: இவர் ஏற்கனவே பாலிவுட்டில் மினி பட்ஜெட் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். சிலர் கடை திறப்பு விழாவுக்கும் அவரை அழைக்கிறார்கள். ஆல்பம் பாடல்களில் நடிக்கிறார். மோனாலிசா தன்னையும் சினிமா உலகில் நிலைத்து நிற்க சில திறமைகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் குறித்து தற்போது பரவலாக பேசப்படும் விஷயம், அவர் மலையாள திரையுலகில் அறிமுகம் ஆகிறார் என்பதுதான்.இவர் மலையாள நடிகர் கைலாசுடன் இணைந்து நாகம்மா என்ற படத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. பினுவர்க்கீஸ் இயக்கும் இந்த படம் இம்மாத இறுதியில் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பூஜை வெளியீட்டு விழா கொச்சியில் நடந்தது. இதில் மோனாலிசா கலந்து கொண்ட வீடியோக்களை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











