»   »  அடப்பாவமே, சமுத்திரக்கனி பட தயாரிப்பாளர் இதற்காகவா தாக்கப்பட்டார்?

அடப்பாவமே, சமுத்திரக்கனி பட தயாரிப்பாளர் இதற்காகவா தாக்கப்பட்டார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: பிரபல மலையாள பட தயாரிப்பாளர் மஹா சுபைரை தாக்கிய வழக்கில் 4 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமுத்திரக்கனி தனது அப்பா படத்தை மலையாளத்தில் ஆகாச மிட்டாயீ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். ஜெயராம் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தை மஹா சுபைர் தயாரிக்கிறார்.

ஹீரோயினாக ஒப்பந்தமான வரலட்சுமி சரத்குமார் படத்தைவிட்டு வெளியேறினார்.

தாக்குதல்

தாக்குதல்

கொச்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் படப்பிடிப்பு நடந்தபோது மஹா சுபைரை குடிபோதையில் சில ரவுடிகள் தாக்கியதாக கூறப்பட்டது. இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கைது

கைது

சுபைர் தாக்கப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த கொச்சி போலீசார் அந்தோனி(24), முகமது இஷாம்(24), கார்ல்டன் பாரமல்(28) மற்றும் சீட்ரிக் மென்டஸ்(22) ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.

தேடல்

தேடல்

தயாரிப்பாளர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் 10 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல்

ஹோட்டல்

வாலிபர்கள் படப்பிடிப்பு நடந்த ஹோட்டலில் உள்ள பாரில் குடித்துள்ளனர். அப்போது வாகனங்களை நிறுத்துவது குறித்து அவர்களுக்கும் பாதுகாவலர் பிரகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரம் அவ்வழியாக சென்ற சுபைர் போனில் பேசுவதை பார்த்த வாலிபர்கள் அவர் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பதாக தவறாக நினைத்து அவரை தாக்கியுள்ளனர். இதை போலீசாரே மீடியாவிடம் தெரிவித்துள்ளனர்.

English summary
Kochi police have arrested four youths in connection with producer Maha Subair attack case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil