Don't Miss!
- Lifestyle
உங்க ராசிப்படி காதலில் நீங்கள் எந்த விஷயத்தில் சொதப்புவீங்களாம் தெரியுமா? உடனே கரெக்ட் பண்ணிக்கோங்க!
- Technology
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
- News
"பூப்போட்டாராமே".. ஓபிஎஸ்ஸூக்கு "வெள்ளைப்பூ" தந்த பேச்சியம்மாள்.. அதுவும் 3 முறை.. ஹேப்பியில் பன்னீர்
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அப்பாவும் மகனும் எப்படியெல்லாம் வெறித்தனம் காட்டியிருக்காங்க பாருங்க.. மகான் மேக்கிங் வீடியோ!
சென்னை: சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் மிரட்டி எடுத்த மகான் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
முதல்முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் தந்தை விக்ரம் நடித்த மகான் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி வெளியானது.
திரையில் இருவரும் மிரட்ட எப்படியெல்லாம் நடித்தார்கள் என்கிற மேக்கிங் வீடியோ மேலும், ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுத்துள்ளது.
2208
ஓட்டுகளில்
வெற்றியை
நழுவவிட்ட
கானா
பாலா...
என்ன
இப்படி
ஆயிடுச்சு!

மாஸ் காட்டிய மகான்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இம்மாதம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியான மகான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சக்சஸ் மீட் பார்ட்டியையும் மகான் படக்குழு பிரம்மாண்டமாக கேக் வெட்டிக் கொண்டாடியது.

குப்பைப் படம்
ஜிகர்தண்டா படத்தின் ஆரம்பத்தில் கார்த்திக் இயக்கிய ஷார்ட் ஃபிலிமை குப்பைப் படம் என்றும் நல்ல படம் என்றும் சொல்வது போல மகான் திரைப்படத்தையும் விமர்சகர்கள் கழுவி ஊற்றியும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தும் உள்ளனர். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் மகான் படக்குழுவினர் ஹேப்பி ஆகி உள்ளனர்.

மேக்கிங் வீடியோ
தியேட்டரில் இந்த படம் வெளியாகி இருந்தால் பிப்ரவரி மாதம் ஆரம்பத்திலேயே தியேட்டரில் வசூல் களைகட்டியிருக்கும் என்றும் விக்ரம் ரசிகர்கள் புலம்பித் தீர்த்தனர். இந்நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்த தற்போது இந்த படம் உருவான மேக்கிங் வீடியோவை அமேசான் பிரைம் வெளியிட்டுள்ளது.

விஸ்வரூப விக்ரம்
பிசிக்ஸ் டீச்சர், சரக்கடிக்க ஆசைப்படும் சாதாரண மனிதன், சூரா சரக்கு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பிரைன், மகனுடன் மல்லுக்கட்டும் தந்தை, கேங்ஸ்டர் என ஏகப்பட்ட கெட்டப்புகளில் விஸ்வரூபம் எடுத்துள்ள விக்ரமின் வெரைட்டியான நடிப்பு காட்சிகளுக்கு விக்ரமும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் எவ்வளவு மெனக்கெட்டனர் என்பதை இந்த வீடியோவில் தெளிவாக காட்டி உள்ளனர்.

துருவ் டிரான்ஸ்ஃபர்மேஷன்
சாக்லேட் பாய் இளைஞர் முதல் டெரரான என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் தாதா வரை துருவ் விக்ரம் தனது உருவ ரீதியாக வொர்க்கவுட் செய்து டிரான்ஸ்ஃபர்மேஷன் ஆன காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. மேலும், பாபி சிம்ஹா சத்யவானாக மாறியது, சிம்ரன் நாச்சியாக அசத்தியது என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உழைப்பையும் இந்த மேக்கிங் வீடியோ காட்டி உள்ளது.