புற்றுநோயுடன் போராடிய மகாபாரத நடிகர் உயிரிழந்தார்.. யாராலும் மறக்க முடியாத கர்ணன்!

மும்பை: தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'மகாபாரதம்'தொடரில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பங்கஜ் தீர். புற்றுநோயுடன் நீண்டகாலமாகப் போராடி வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 68. இவரின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தூர்தர்ஷனில் 1988 ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான 'மகாபாரதம்' தொடரில் கர்ணன் வேடத்தில் நடித்தவர் தான் பங்கஜ் தீர். தனது அற்புதமான நடிப்பால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை மனதில், சூர்யபுத்திர கர்ணனாக வாழ்ந்து, வலிமையையும், தியாகத்தையும் தனது நடிப்பால் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினார். இவர் 'மகாபாரதம்' தொடர் மட்டுமில்லாமல், 'சந்திரகாந்தா' மற்றும் 'ஓம்கார்' போன்ற பிரபலமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

Mahabharat Pankaj Dheer death
Photo Credit:

மகாபாரத நடிகர்: தொலைக்காட்சிதொடர்கள் மட்டுமில்லாமல், 91 ஆம் ஆண்டு வெளியான 'சௌகந்த்', 'சண்டால்' 'கர்மா', 'ஜெய் மா வைஷ்ணோ தேவி', மற்றும் 'பாட்சா போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் இவர், விஜய்யுடன் 'பைரவா' திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தெலுங்கில் 'கஞ்சரம்பா' என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சுமார் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த பங்கஜ் தீர் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக ஒரு சில திரைப்படங்களை எடுத்துள்ளார். அவரது மகன் நிகிதின் தீர் ஒரு பிரபலமான நடிகராக இருக்கிறார்.

உயிர் பிரிந்தது: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பங்கஜ் தீர் கடந்த சில ஆண்டுகளாக அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமானதால், மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 2:00 மணியளவில் அவர் காலமானார். அவரின் உடல் உறுப்புகள் செயலிழந்ததே மரணத்திற்கு காரணமென மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 'மகாபாரதம்' தொடரில் நடித்த திரௌபதி, அர்ஜுனன் போன்ற பல போன்ற கதாபாத்திரத்தில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் இந்தி திரையுலகைச் பிரபலங்கள் பலரும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பங்கஜ் தீர் மறைவு செய்தி, இந்திய திரையுலகையும், குறிப்பாக 80களின் தொலைக்காட்சி ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X