Don't Miss!
- News
மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விவாகரத்து என்பது மரணத்தை விட கொடுமையானது.. மனைவியை பிரிந்த நிலையில் மனம் திறந்த பிரபல நடிகர்!
மும்பை: விவாகரத்து செய்வது என்பது மரணத்தை விடக் கொடுமையானது என பிரபல டிவி நடிகர் நிதிஷ் பரத்வாஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமீர்கான் விவாகரத்து மற்றும் தென்னிந்திய நடிகர்களான சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு துவக்கத்திலேயே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், மகாபாரத டிவி தொடரில் கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்றவர் விவாகரத்துக் குறித்து கூறியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
ரஜினி குடும்பத்தை பிரிவது தனுஷுக்கு பாதிப்பை தருமா?...

அமீர்கான் விவாகரத்து
கடந்த ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது இரண்டாவது மனைவியான கிரண் ராவை பிரிவதாக அறிவித்தார். 56 வயதாகும் நடிகர் அமீர்கான் இந்த வயதில் விவாகரத்தை அறிவிக்கிறாரே என நாடு முழுவதும் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் ஒரே சலசலப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் மனைவியை பிரிவதாக அறிவித்தார்.

சமந்தா - சைதன்யா விவாகரத்து
கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தனது முதல் படத்தின் ஹீரோவான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் நடிகை சமந்தா. 4 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு
கடந்த ஆண்டு இரு பெரும் விவாகரத்து அறிவிப்புகள் வெளியான நிலையில், இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே ஜனவரி 17ம் தேதி இரவு நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் வெற்றிகரமாக இல்லற வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில், திடீரென இப்படி பிரிவதாக அறிவித்தது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
Recommended Video

மரணத்தை விட வலி தரும்
இந்நிலையில், பி.ஆர். சோப்ரா தயாரிப்பில் உருவான மகாபாரத தொடரில் ஸ்ரீகிருஷ்ணராக நடித்து இந்திய ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த நடிகர் நிதிஷ் பரத்வாஜ் விவாகரத்து செய்வது என்பது மரணத்தை விட அதிக வலியை தரக்கூடியது என சமீபத்தில் அளித்த பேட்டி அதிவேகமாக பரவி வருகிறது.

நிதிஷ் பரத்வாஜ் விவாகரத்து
கடந்த 2019ம் ஆண்டே தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக நடிகர் நிதிஷ் பரத்வாஜ் தற்போது அறிவித்து இருப்பது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும், விவாகரத்து செய்வது என்பது மரணத்தை விட அதிக வலியையும் வேதனையையும் தரக்கூடியது எனக் கூறியுள்ளார்.

இரண்டாவது மனைவி
58 வயதாகும் நடிகர் நிதிஷ் பரத்வாஜ் கடந்த 1991ம் ஆண்டே மோனிஷா பாட்டீல் எனும் பிரபல சமையல் கலை நிபுணரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், 2005ம் ஆண்டு இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்து விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் 2009ம் ஆண்டு ஸ்மிதா கேட்டை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகர் நிதிஷ் பரத்வாஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

வருத்தத்தில் நடிகர்
ஆனால், இந்த இரண்டாவது முறை விவாகரத்தில் நடிகர் நிதிஷ் பரத்வாஜுக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை என்பது அவரது சமீபத்திய பேட்டியில் இருந்தே தெளிவாக தெரிகிறது. தவறான முடிவு காரணமாகவே தம்பதியினர் விவாகரத்து முடிவை எடுக்க நேரிடுவதாகவும் அவர் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.