நான் அணிந்திருக்கும் இந்த புன்னகை நீ கொடுத்தது.. கணவரை உருகி உருகி காதலிக்கும் மகாலக்ஷ்மி!
சென்னை: நயன்தாராவை தங்கமே, வைரமே என இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொஞ்சி வருவதை போலவே, தனது கணவரை அன்பே, ஆருயிரே என மகாலக்ஷ்மி வர்ணித்து போஸ்ட்டுகளை போட்டு வருகிறார்.
சமீபத்தில் திருப்பதியில் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் சின்னத்திரை நடிகை மகாலக்ஷ்மிக்கும் திருமணம் நடைபெற்றது.
ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான மகாலக்ஷ்மி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட ரவீந்தரை கொஞ்சி குழாவி வருகிறார்.

சேனல் சேனலா
திருமணம் ஆனதும் அனைவரும் ஹனிமூனுக்கு வெளிநாடு செல்வார்கள். ஆனால், ரவீந்தர் மற்றும் மகாலக்ஷ்மி சேனல் சேனலா சென்று பேட்டி கொடுத்து வருகின்றனர் என நெட்டிசன்கள் கலாய்த்து இருந்தனர். திருமணம் முடிந்த பிறகு ஏன் இந்த திருமணத்தை செய்து கொண்டோம், தங்களுக்குள் எப்படி காதல் மலர்ந்தது போன்ற விஷயங்களை இருவரும் விரிவாக எடுத்துரைத்தனர்.

ஆன்மிக சுற்றுலா
கல்யாணம் முடிந்து கன்னித்தீவுக்கு ஹனிமூனுக்கு போறீங்களா என செய்தியாளர்கள் கேட்க, சிரித்துக் கொண்டே அதெல்லாம் இல்லை பாஸ் நாங்க குல தெய்வம் கோயிலுக்கு போயிட்டு வருகிறோம் என கூலாக பதில் அளித்திருந்தார் ரவீந்தர். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்த நிலையில், ஒரே ஆன்மிக சுற்றுலாவா இருக்கே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

ரிசப்ஷனுக்கு ரெடியா
திருமணத்தை திருப்பதியில் செய்த நிலையில், சென்னையில் சொகுசு ஹோட்டலில் திரையுலக நண்பர்களுக்கும் சின்னத்திரை நண்பர்களுக்கும் விருந்து வைக்கப் போகிறார்களா மகாலக்ஷ்மி மற்றும் ரவீந்தர் என்கிற கேள்வி இந்த போட்டோவை பார்த்ததும் எழுந்துள்ளது. ஹார்ட்டீன் டெகரேஷனுக்கு முன்பாக இருவரும் செம அழகாக உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளனர்.

கணவருக்கு கவிதை
நான் அணிந்திருக்கும் இந்த புன்னகை நீ தந்தது என கணவர் ரவீந்தரை பார்த்து உருகியபடி இப்படியொரு கேப்ஷனை கொடுத்து இந்த புகைப்படத்தை மகாலக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இருவரையும் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

செம அழகு
முன்னாள் சன் மியூசிக் விஜேவான மகாலக்ஷ்மி சன் டிவி சீரியல்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தாலும், காதல் காரணமாகத்தான் அவரது கரத்தை பிடித்தேன் என தொடர்ந்து சொல்லி வருவது செம அழகு என ரசிகர்கள் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

விரைவில் விஜய் டிவியில்
பிக் பாஸ் நிகழ்ச்சியை ஃபேட்மேன் என்கிற பெயரில் விமர்சித்து வந்த ரவீந்தரை மகாலக்ஷ்மி திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரது திருமணத்தை மற்ற நிகழ்ச்சியா? அல்லது பிக் பாஸ் சீசன் 6ல் இருவரும் வரப் போறாங்களா என ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பி வருகின்றன.


Click it and Unblock the Notifications











