»   »  'மகாநதி' படம் இப்படி மாறிப்போச்சே..!

'மகாநதி' படம் இப்படி மாறிப்போச்சே..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையைக் கொண்டு உருவாகி வரும் படம் 'மகாநதி'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

சாவித்ரியின் கணவர் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். இந்தப் படத்தில் சமந்தா பத்திரிகை நிருபர் வேடத்தில் நடிக்கிறார். சாவித்ரி நடித்த சில முக்கியப் படங்களுக்கு கதை எழுதிய அலூரி சக்ரபாணி வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.

Mahanati movie tamil title changed

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படம் தமிழிலும் 'மகாநதி' என்ற பெயரிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நடிகையர் திலகம் என்று பெயர் வைத்துள்ளனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்று நடிகையர் திலகம் சாவித்ரி என அவரது காலத்தில் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் டைட்டில் அவுடட் டேட்டடாக இருப்பதால் மீண்டும் மாற்றப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
The movie 'Mahanati' is produced by Savithri's biographical story. This movie was starring by Dulquer Salman, Keerthi Suresh, Samantha and Prakashraj. The Tamil version of this film is being renamed as 'Nadigaiyar Thilagam'.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil