மஹா சமுத்திரம் ரிலீஸ் தேதி மற்றும் டிரைலர் அப்டேட் வெளியானது!

சென்னை : நடிகர் சித்தார்த் மற்றும் சர்வானந்த் இணைந்து மஹா சமுத்திரம் என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகின்றனர்.

தெலுங்கில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஆர்எக்ஸ் 100 மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது அந்த படத்தை இயக்கிய அஜய் பூபதி இப்படத்தையும் இயக்கியுள்ளார்.

லாக்டவுன் காரணமாக தொடர்ந்து ரிலீஸ் தேதியை தள்ளி போய்க்கொண்டே இருக்க இப்பொழுது அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை மற்றும் டிரைலர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

வசூல் சாதனை

வசூல் சாதனை

கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியான ஆர்எக்ஸ் 100 திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. கார்த்திகேயா இதில் ஹீரோவாக நடித்திருந்தார். பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் நடிகர் ராம்கி இதில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆர் எக்ஸ் 100 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அஜய் பூபதி இப்பொழுது மஹா சமுத்திரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

மஹா சமுத்திரம்

மஹா சமுத்திரம்

முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் அஜய் பூபதி மஹா சமுத்திரம் படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகர்களை வைத்து இயக்கி வருகிறார். தெலுங்கு நடிகர் சர்வானந்த் மற்றும் சித்தார்த் இப்படத்தில் ஹீரோக்களாக நடிக்க அதிதி ராவ் மற்றும் அனு இம்மானுவேல் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

இரண்டு முன்னணி கதாநாயகர்கள்

இரண்டு முன்னணி கதாநாயகர்கள்

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வந்த இந்த திரைப்படம் லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு கொண்டே என்றது. இப்பொழுது அனைத்து கட்ட பணிகள் முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராக இருக்க அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகிறது

அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகிறது

அதன்படி மஹா சமுத்திரம் அக்டோபர் 14ஆம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகிறது . மேலும் டிரைலர் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி உள்ளதால் நீண்ட நாட்களாக ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்க தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X