»   »  சக்தி இல்லாமல் சிவன் இல்லை.. சிவன் இல்லாமல் சக்தி இல்லை... கோலிவுட்டை ஆட்கொண்ட 'கடவுள்கள்'!

சக்தி இல்லாமல் சிவன் இல்லை.. சிவன் இல்லாமல் சக்தி இல்லை... கோலிவுட்டை ஆட்கொண்ட 'கடவுள்கள்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்மையப்பன்.. இது சிவபெருமானின் மறு பெயர்.. உமை ஒரு பாகம் கொண்ட ஈசன்.. இந்த சிவபெருமான் குறித்து வந்த திரைப்படங்கள் நிறைய. சிவபெருமானின் திருவிளையாடல்கள் மிகப் பிரசித்தம். அதை வைத்து தமிழில் திருவிளையாடல் என்ற படமே வந்தது.

தமிழ்த் திரையுலகம் ஒரு காலத்தில் ஆன்மீக, புராணப் படங்களுக்குப் பெயர் போனது. தெலுங்கிலும், தமிழிலும் ஏராளமான புராணப் படங்கள் நிறைய வந்தன. ஆனால் பின்னர் அந்த டிரெண்டு மாறிப் போனது.

அந்தக் காலத்தில் சிவபெருமான் குறித்த படங்கள் நிறைய வந்தன. அதில் மக்கள் மனதில் இன்றளவும் இருப்பவை இவை. கிராபிக்ஸ், அனிமேஷன் என எந்த வசதியுமே இல்லாத காலகட்டத்தில் சாமிகளும், அரக்கர்களும் மோதிய சண்டைக் காட்சிகள், கடவுள்கள் செய்யும் வித்தைகள் என பலவற்றை விதம் விதமாக காட்டி அசத்தியிருப்பார்கள் அக்காலத்து டெக்னீஷியன்கள்.

இப்போது காலம் மாறி விட்டது. கம்ப்யூட்டர்தான் கடவுள். மகா சிவராத்திரி நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் சிவபெருமான் உள்ளிட்ட கடவுள் வேடத்தில் நடித்த சில நடிகர்களையும், அவர்களின் படங்களையும் ஒரு பார்வை பார்ப்போம்.

சிவன் என்றால் சிவாஜிதான்

சிவன் என்றால் சிவாஜிதான்

சிவ பெருமான் என்றால் டக்கென நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன்தான். திருவிளையாடல் படத்தில் வந்த சிவாஜியை பார்த்து பலரும் இப்படித்தான் சிவபெருமான் இருப்பாரோ என்று சந்தேகப்படும் அளவுக்கு அந்த வேடத்தில் வாழ்ந்திருப்பார். படத்தில் கே.பி.சுந்தராம்பாளின் கணீர் குரலில் வரும் பாடல்கள் மறக்க முடியாதது!

முருகா....!

முருகா....!

முருகன் வேடத்திற்கு அந்தக் காலத்தில் மிகப் பொருத்தமான நடிகராக பார்க்கப்பட்டவர் சிவக்குமார். கந்தன் கருணை படத்தில் ஒரு பக்கம் ஜெயலலிதா, இன்னொரு பக்கம் கே.ஆர். விஜயா புடை சூழ சிரித்த முகத்துடன் முருகனாக அவர் வீற்றிருந்த காட்சி இன்னும் கூட ரசிகர்களின் மனதை விட்டு அகலவில்லை.

16 வயது பாலமுருகன்

16 வயது பாலமுருகன்

அதேசமயம், பாலமுருகன் அதாவது சின்ன வயது முருகன் வேடத்தில் 16 வயதினிலே ஸ்ரீதேவியை ஒரு கால் நடிக்க வைத்தது தமிழ்த் திரையுலகம். அந்த முருகனையும் நம்மவர்கள் நன்றாகவே ரசித்தார்கள்.

சக்தி இல்லாமல் சிவன் இல்லை!

சக்தி இல்லாமல் சிவன் இல்லை!

திருவிளையாடலில் ஒரு வசனம் வரும். சிவன் இல்லாமல் சக்தி இல்லை என்று சிவாஜி சொல்வார். உடனே சாவித்திரி சக்தி இல்லாமல் சிவன் இல்லை என்பார்.. அந்த சக்தி வேடத்தில் வந்தவர்தான் சாவித்திரி. பார்வதியாக அந்த படத்தில் வாழ்ந்திருப்பார் சாவித்திரி. அதிலும் சிவாஜி கணேசனின் சத்தமான நடிப்புக்கு இணையாக சத்தான நடிப்பைக் கொடுத்திருப்பார் சாவித்திரி.

ஓம் ராகவேந்திராய..!

ஓம் ராகவேந்திராய..!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு முழுமையைக் கொடுத்த படம் என்றால் அது ராகவேந்திரர்தான். வில்லனாக, ஹீரோவாக, காமெடி வேடத்தில், குணச்சித்திர வேடத்தில் நடித்த அவர் கடவுள் அவதார வேடத்திலும் நடித்து ஒரு முழுமையான நடிகராக மாறியது இந்த படத்தில்தான். இதில் சுவாமி ராகவேந்திரராக அவர் மாறியிருப்பார். இது ரஜினியின் 100வது படமும் கூட.

காளி.. மூ்ளி.. ஆங்காரி...!

காளி.. மூ்ளி.. ஆங்காரி...!

கே.ஆர்.விஜயா.. இவரை தமிழகத்துப் பெண்களால் மறக்கவே முடியாது. ஒரு காலத்தில் இவரது படங்கள் சக்கை போடு போட்டன. அதாவது அம்மன் வேடத்தில் கே.ஆர்.வி. நடித்த படங்கள் தியேட்டர்களில் திருவிழாக் கூட்டத்தைக் கூட்டின. பல தியேட்டர்களில் பெண்கள் சாமியாடிய காட்சிகளையும் தமிழகம் கண்டது. அம்மன் வேடத்தில் கன கச்சிதமாக பொருந்திப் போனவர் இந்த புன்னகை அரசி... இவர் கோரமாக சிரித்தபோதும் கூட அந்த அம்மன் படங்கள் மக்களை வசீகரிக்கத் தவறவில்லை. தியேட்டர்களின் பெரிய திரையில், விஜயாவின் அந்த பெரிய சைஸ் புன்னகையைப் பார்த்து ரசித்த காலம்.. இப்போதும் மனதில் பசுமையாக!

ரம்மியமான கடவுள்!

ரம்மியமான கடவுள்!

அம்மன் வேடத்தில் ரம்யா கிருஷ்ணனும் நடித்து தானும் ஒரு கடவுள் தான் என்பதை ஓரளவுக்கு நிரூபித்தார். அம்மன் என்ற பெயரில் ரம்யா நடித்த படம் பெரும் ஹிட்டானது.

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

இவரும் ஒரு படத்தில் கடவுளாக வந்தார். பெயர் குறிப்பிடாத கடவுளாக, அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தில் கடவுள் வேடத்தில் நடித்தார். ஆனாலும் மேஜிக் மேன் போல இந்தக் கடவுளை அப்படத்தில் சித்தரிக்கவில்லை. இயல்பான, எதார்த்தமான, சிம்பிளான கடவுளாக காட்டியிருப்பார்கள்.

ஆத்தா... தாயே...!

ஆத்தா... தாயே...!

மீனாவின் பெரிய கண்களுக்கு சிவப்புச் சாயம் கூடுதலாகப் பூசி, பெரிய புருவம் தீட்டி,. வாயில் லிப்ஸ்டிப்பை கூட்டி, நெற்றியில் பெரிய சைஸ் பொட்டை வைத்து அவரையும் அம்மனாக்கி கொஞ்ச காலம் உலவ விட்டனர். சும்மா சொல்லக் கூடாது, மீனாவும் கொஞ்ச நாட்கள் கிராபிக்ஸ் புண்ணியத்தில் பக்திப் பெருக்கைக் கூட்டினார்.

ரோஜா

ரோஜா

தமிழ், தெலுங்கில் பட வாய்ப்புகள் குறைந்த நேரத்தில் ரோஜா திடீரென அம்மன் அவதாரம் எடுத்து சரமாரியாக சில படங்களில் அம்மனாக வந்து அதகளம் செய்தார்.

English summary
Not very long ago, Tamil cinema was producing lots of devotional movies. Movies that were powerful enough to make the audience literally pray in front of the big screen. Such were the performances by the actors and their magnitude screen presence as Gods.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil