கணவர் மடியில் உட்கார்ந்து...பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி செய்த வேலையை பாருங்க

சென்னை : விஜய் டிவி.,யில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பலரும் பிரபலமாகி விடுகிறார்கள். அவர்களுக்கென தனி ரசிகர் கூட்டமும் வந்து விடுகிறது.

Mahat shared his romantic photo with wife

அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மகத் ராகவேந்தர். சிம்பு நடித்த வல்லவன் படத்தில் மிகச் சிறிய ரோலில் நடித்து, நடிகரானவர் மகத். அதற்கு பிறகு மங்காத்தா, பிரியாணி, ஜில்லா, சென்னை 28 - 2, வந்தா ராஜாவா தான் வருவேன், மாநாடு உள்ளிட்ட பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்தார்.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மகத், சக போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தா உடன் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். பிக்பாஸ் போட்டியில் இருந்து 70 வது நாளில் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்ட மகத், நீண்ட நாள் காதலியான பிரச்சி மிஸ்ராவை 2020 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமண விழாவில் சிம்பு, அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர். மகத் மற்றும் பிரச்சிக்கு ஜுன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அடிக்கடி தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளி வருகிறார் மகத்.

சமீபத்தில் தான் மகத்திற்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்த படத்திரில் ஹுமா குரேஹி, சோனாக்ஷி சின்ஹா ஆகியோருடன் நடித்து வருகிறார். இதனையடுத்து மகத்திற்கு பல மொழிகளிலும் மவுசு கூடி வருகிறது. தமிழ், தெலுங்கு படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் பிரபலமான நடிகர் ஆகி வருகிறார் மகத்.

இந்நிலையில் தனது மனைவியை மடியில் அமர வைத்து எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X