பாலு மகேந்திரா உடலைப் பார்த்து கதறியழுத இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா!

By Shankar

சென்னை: மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் உடலைப் பார்த்து கதறி அழுதார் இயக்குநர் மகேந்திரன்.

இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் உடல் திரையுலகினர் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற காவியங்களைத் தந்தவருமான மகேந்திரன் இன்று பாலு மகேந்திரா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பாலு மகேந்திரா உடலைப் பார்த்து கதறி அழுதார் அவர்.

balu mahendra, Mahendiran and bharathiraja

மகேந்திரன் முதல் முதலாக இயக்கிய முள்ளும் மலரும் படத்துக்கு அற்புதமாக ஒளிப்பதிவு செய்து தந்தவர் பாலு மகேந்திராதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா

பாலு மகேந்திராவின் சமகால இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா, தனது நண்பரான பாலு மகேந்திராவின் மரணத்தை நம்ப முடியாமலும் தாங்க இயலாமலும் கதறி அழதார். பாலு மகேந்திரா உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டி மீது விழுந்து கண்ணீர் விட்டுக் கதறினார் பாரதிராஜா.

பாலு மகேந்திராவுடனான தன் நட்பைச் சொல்லிச் சொல்லி அவர் அழுது புலம்பினார்.

சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் பாரதிராஜாவைப் பற்றி மிக நெகிழ்வாகப் பேசியிருந்தார் பாலு மகேந்திரா.

பாலா

பாலு மகேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே வந்துவிட்ட பாலா, பின்னர் உடலருகே கலங்கிய கண்களுடன் இறுக்கமாக அமர்ந்திருந்தார்.

தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் அனைவருமே பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்த வந்த வண்ணமுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X