ரஜினிகாந்தின் பரபரப்பு பேச்சு வீடியோ
சென்னை: சினிமா துறையில் தனக்கென தனியிடம் பெற்றுத் தந்த முக்கியமான விஷயம் குறித்து ரஜினிகாந்த் இன்று தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இன்று சந்தித்தார். சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
ஹீரோ
வில்லனாக நடித்துக் கொண்டிருந்த என்னை பைரவி படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தவர் கலைஞானம். மேலும் ரஜினி ஸ்டைல் என்பதை அறிமுகம் செய்தவர் இயக்குனர் மகேந்திரன்.
அறிவிப்பு
வரும் 31ம் தேதி எனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லல என் முடிவை வரும் 31ம் தேதி அறிவிப்பேன் என்று தான் சொல்கிறேன்.
போர்
போர் என்றால் தேர்தல் என்று தான் அர்த்தமா?. யுத்தத்திற்கு சென்றால் ஜெயிக்க வேண்டும். ஜெயிப்பதற்கு வீரம் மட்டும் போதாது, வியூகம் தேவை. எனக்கு அரசியல் புதிது அல்ல. அரசியல் பற்றி நன்றாக தெரியும் என்பதால் தான் தயங்குகிறேன்.
சந்திப்பு
என் பிறந்தநாள் அன்று உங்களை சந்திக்காதது பற்றி தவறாக நினைக்க வேண்டாம். அன்று தனியாக இருக்க விரும்பினேன். கட்டுப்பாடும், உழைப்பம் மிகவும் முக்கியம் என்றார் ரஜினி.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.