»   »  முள்ளும் மலரும் படம் வெளியாக உதவியவர் கமல்தான்!- இயக்குநர் மகேந்திரன்

முள்ளும் மலரும் படம் வெளியாக உதவியவர் கமல்தான்!- இயக்குநர் மகேந்திரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி நடித்த முள்ளும் மலரும் படம் வெளியாக எனக்கு பெரிதும் உதவியவர் கமல் ஹாஸன்தான் என்று இயக்குநர் மகேந்திரன் நினைவு கூர்ந்தார்.

விக்ரம் பிரபு-ஷாமிலி நடித்துள்ள ‘வாஹா' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "நான் மற்றவர்கள் மாதிரி சினிமாவுக்கு விரும்பி வந்தவன் இல்லை. அழைத்து வரப்பட்டவன். ஆரம்பத்தில் எனக்கு படம் இயக்கும் எண்ணமெல்லாம் இல்லை.

ஆனால் என்னுடைய முதல் படமான ‘முள்ளும் மலரும்' படத்தை கட்டாயப்படுத்தி இயக்க வைத்தவர் கமல் ஹாஸன்தான்.

Mahendran remembers Kamal's timely help to complete Mullum Malarum

அந்தப் படத்தை நான் ஆசைப்பட்ட மாதிரி எடுக்க நினைத்தேன். ஆனால், எனக்கு சரியான கேமராமேன் அமையவில்லை. நல்ல டேஸ்ட் உள்ளவர்கள் கிடைக்கவில்லை. உடனே, கமல் சார்தான் பாலுமகேந்திராவை எனக்கு அறிமுகப்படுத்தி அந்த படத்தை நல்லவிதமாக எடுக்க உதவினார்.

அந்த படத்தோட படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து ‘செந்தாழம் பூவில்' பாடலும், ஒரு காட்சியும் மட்டும் படமாக்க வேண்டியிருந்தது. ஆனால், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இந்த படத்துக்கு இனிமேல் செலவு செய்யமுடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். அந்த காட்சியையும், பாடலையும் படமாக்கமலேயே படத்தை வெளியிடலாம் என முடிவு செய்தார்கள். ஆனால், எனக்கு அதில் திருப்தியில்லை.

இதை கமலிடம் சென்று நான் கூற, அவர் தயாரிப்பாளரிடம் பேசினார். அவருடைய பேச்சுக்கும் தயாரிப்பாளர் செவிசாய்க்கவில்லை. இறுதியில், கமல் தனது சொந்த செலவிலேயே அந்த பாடலையும், காட்சியையும் படமாக்குகிறேன் என்று சொன்னார். அதன் பிறகுதான் அந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வெளியானது.

அந்த காட்சியும், பாடலும் படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்தது என்று சொல்லலாம். நான் இன்று ஒரு இயக்குனராக இந்த மேடையில் நிற்க கமலும் ஒரு காரணம்," என்றார்.

இந்த விழாவில், நடிகர் கமல் ஹாஸன், பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு, தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, பி.எல்.தேனப்பன், தனஞ்செயன், விஜய் ஆண்டனி, கணேஷ் வெங்கட் ராமன், இயக்குநர் சசி, சீனு ராமசாமி, இசையமைப்பாளர் டி.இமான், நடிகை ரன்யா ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

English summary
Director Mahendran remembered how Kamal Hassan was helped him to make Rajinikanth's Mullum Malarum.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil