»   »  பிரமாண்ட இயக்குநர் படத்தில் மகேஷ்பாபு! - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரமாண்ட இயக்குநர் படத்தில் மகேஷ்பாபு! - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : 'பாகுபலி' வரிசைப் படங்களைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் அடுத்த படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

அடுத்த படத்தின் கதை எப்படிப்பட்டது, யார் ஹீரோ, பாகுபலி போல அதுவும் பிரமாண்டமாக இருக்குமா... என்பன போன்ற தகவல்கள் வெளியாகாமலேயே இருக்கின்றன.

இந்நிலையில் ராஜமௌலி அடுத்து இயக்கும் படத்தில் மகேஷ்பாபு நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் மகேஷ்பாபுவே உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஸ்பைடர் :

ஸ்பைடர் :

மகேஷ்பாபு நடிப்பில் நாளை தெலுங்கு மற்றும் தமிழில் 'ஸ்பைடர்' படம் வெளியாகவுள்ளது. 'ஸ்பைடர்' படத்தைத் தொடர்ந்து கொரட்டலா சிவா இயக்கத்தில் 'பாரத் அனே நானு' என்ற படத்தில் நடிக்கிறார் மகேஷ் பாபு.

ஷூட்டிங்கில் பிஸி :

ஷூட்டிங்கில் பிஸி :

'பாரத் அனே நானு' படத்தின் படப்பிடிப்பில் தான் தற்போது மகேஷ்பாபு பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து வம்சி இயக்கத்திலும் மகேஷ் பாபு ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

அடுத்த வருடம் ராஜமௌலி படம் :

அடுத்த வருடம் ராஜமௌலி படம் :

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் அதாவது அடுத்த ஆண்டு இறுதியில் ராஜமௌலி இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் மகேஷ் பாபு.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

அடுத்த வருடம் தொடங்கினாலும் இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். பிரமாண்டத்திற்குப் பெயர்போன ராஜமௌலி தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபுவை இயக்கவிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

English summary
Mahesh Babu's Spider in Tamil and Telugu will be released tomorrow. Mahesh Babu will be cast in Rajamouli's next film. The official announcement about this film will be released soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X