»   »  சூப்பர் ஸ்டாருக்கு பிடித்த தளபதியின் 'பன்ச் டயலாக்' எது தெரியுமா?

சூப்பர் ஸ்டாருக்கு பிடித்த தளபதியின் 'பன்ச் டயலாக்' எது தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் பேசிய பன்ச் வசனங்களில் தனக்கு பிடித்த வசனம் எது என்பதை தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள படம் ஸ்பைடர். மகேஷ் பாபு முதல் முறையாக நேரடி தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மகேஷ் பாபு தமிழில் பேசினார். அவர் பேசப் பேச அரங்கில் இருந்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்று கூறி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அப்போது அவர் கூறியதாவது,

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. டென்ஷனாகவும் இருக்கு. 18 வருஷம் ஆக்டிங்கிற்கு பிறகும் தற்போது தான் முதல் படம் பண்ணுகின்ற ஃபீலிங் இருக்கிறது.

முருகதாஸ்

முருகதாஸ்

10 வருஷமாக நானும், முருகதாஸ் சாரும் சேர்ந்து பணியாற்ற நினைத்தோம். அப்போ முடியல, இப்ப முடிந்தது. என் வீட்டிற்கு வந்து ஒரு மணிநேரம் கதை சொன்னார்.

இயக்குனர்

இயக்குனர்

இயக்குனர் சொன்னதை அப்படியே செய்துள்ளேன். ரூ. 120 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பது எளிது அல்ல. அதற்கு துணிச்சல் வேண்டும். ஸ்பைடர் தயாரிப்பாளர்களுக்கு அது இருக்கிறது.

ஹாரிஸ்

ஹாரிஸ்

ஹாரிஸ் ஜெயராஜ் சார் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். பீட்டர் மாஸ்டர் ஸ்பைடர் படத்திற்கு புது உயிர் கொடுத்துள்ளார். சூர்யா சாரை எனக்கு டைரக்டராக தெரியும்.

சூர்யா

சூர்யா

எஸ்.ஜே. சூர்யா சார் ஒரு பத்து வருஷத்திற்கு முன்பு என்னுடன் படம் பண்ணியிருக்கிறார். இப்போ என் சக நடிகராக நடித்துள்ளோம். உங்களின் கனவெல்லாம் பயங்கரமான கனவு. அது எல்லாம் எனக்கு தான் தெரியும். ஒரு காட்சியில் சூர்யா என்னை கோபமாக பார்த்தபோது எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. எப்படி இருந்தவரை இப்படி ஆக்கிட்டாங்களேன்னு தோன்றியது.

விஜய்

விஜய்

விஜய்யின் பன்ச் டயலாக்கில் எனக்கு பிடித்த வசனம் ஐ ஆம் வெயிட்டிங். துப்பாக்கி படம் பார்த்தபோது இந்த படத்தில் நான் நடித்திருக்கலாமே என்று தோன்றியது. அதை முருகதாஸ் சாரிடமே கூறினேன் என்றார் மகேஷ் பாபு.

English summary
Mahesh Babu impressed the audience by speaking in Tamil at the audio launch of his upcoming movie Spyder. He also revealed his favourite punch dialogue of Vijay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil