ரியல் சிங்கத்தோடு மகேஷ் பாபுவை காட்டுக்குள் இறக்கிவிட்ட ராஜமௌலி.. தரமா இருக்கேப்பா!
ஹைதராபாத்: ராஜமௌலியும் மகேஷ் பாபுவும் கைகோர்த்துள்ள படம் குறித்து சினிமா வட்டாரத்தில் அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்படி இருக்கும்போது, அவரது படத்தின் அப்டேட்க்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் மகேஷ் பாபுவின் பிறந்த நாள் வந்தபோது கூட பெரிய அளவில் எந்த அப்டேட்டும் படக்குழு தரப்பில் இருந்து அறிவிக்கப்படவில்லை. படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகவுள்ளது என்ற தகவல் மட்டும் தான் ரசிகர்களுக்கு உள்ள திருப்தியான அப்டேட்.
படத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார் என்பது தெரிந்ததுதான். பாகுபலி படத்திற்குப் பின்னர் தெலுங்கு சினிமா நடிகர்களுடன் பாலிவுட் நடிகைகள் நடித்து வருகிறார்கள். ஆலியா பட்டில் தொடங்கி, தீஷா பதானி, தீபிகா படுகோன் என பலரும் அடுத்தடுத்து தெலுங்கு நடிகர்களுடன் கைகோர்த்து வருகிறார்கள். அதேபோல் மகேஷ்பாபு மற்றும் ராஜமௌலி இணைந்துள்ள படமான SSMB29 இந்த படத்திலும் தீபிகா படுகோனே நடிக்கிறார்.

சிங்கத்தோடு மகேஷ் பாபு: இப்படி இருக்கையில் இந்த படத்தின் அப்டேட்கள் எதுவும் இல்லையே என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இந்த படத்தை தொடங்குவதற்கு முன்னர் ராஜமௌலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிங்கத்தின் மிகப்பெரிய படத்தின் முன் நின்று கொண்டு தான் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இன்று அதாவது செப்டம்பர் 7ஆம் தேதி எக்ஸ் பக்கத்தில் மகேஷ் பாபு காட்டில் வலம் வரும் வீடியோ ஒன்று உலா வருகிறது. அதில் அவர் கையில் பெரிய கம்பு ஒன்றை வைத்துள்ளார். அவருக்குப் பின்னால் ஒரு சிங்கம் நடந்து வருகிறது. அதேபோல் அவர் நடந்து வரும்போது அவருடன் மற்றொரு சிங்கம் நடந்து வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருவதால் ரசிகர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
வீடியோ: அதாவது SSMB29 படத்திற்காக மகேஷ் பாபு உண்மையான சிங்கத்துடன் பழகி பயிற்சி எடுத்து வருகிறாரே என்று கேட்டு வருகிறார்கள். சில இது படப்பிடிப்பு தள காட்சியாக இருக்க வாய்ப்பு இல்லை, ஆனால் படத்திற்கும் இந்த வீடியோவுக்கும் கட்டாயம் ஏதோ ஒரு சம்மதம் இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள். மேலும் சிலர் இது ஏ.ஐ. வீடியோவாக இருக்குமோ என்றும் கேட்டு வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் விவாதத்தை உருவாக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications











