Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தொடரும் ’விக்ரம்’ வெற்றிக்கூட்டணி..கமலுடன் மீண்டும் இணையும் ஃபஹத்பாசில்
சென்னை : விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல் நடிக்கும் புதிய படத்தில் ஃபஹத் ஃபாசிலும் இணைவதாக தகவல். மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கவுள்ளது குறித்து விரைவில் அறிவிப்பு. மகேஷ் நாராயணன், கமல், ஃபஹத் ஃபாசில் கூட்டணியில் உருவாகும் படம் 'தேவர் மகன்' 2ம் பாகமா என எதிர்பார்ப்பு!
சிவாஜி
கணேசன்
எழுதி
வைத்த
உயில்
ஜோடிக்கப்பட்டதா?
பரபரப்பாக
நடந்த
வழக்கு..
என்ன
ஆச்சு?

விக்ரம் ஆடியோ லாஞ்சில் கமல் உறுதிப்படுத்திய தகவல்
கமலின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான மகேஷ் நாராயணன் தற்போது ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'மலையான்குஞ்சு' என்ற மலையாளப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து ஃபஹத் ஃபாசிலுடன் பணியாற்றி வரும் மகேஷ் நாராயணன் அடுத்ததாக உலக நாயகன் கமல் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக நடிகர் கமலும் இதனை 'விக்ரம்' படத்தின் ஆடியோ வெளியீட்டில் தகவலாகத் தெரிவித்திருந்தார்.

கதை ரெடி... ஸ்கெட்ச்சும் போட்டாச்சு!
இந்த நிலைல சமீபத்துல ஒரு பேட்டில பேசியிருந்த இயக்குநர் மகேஷ் நாராயணன், கமல் நடிக்க இருக்குற படத்தோட கதை ரெடியாகிட்டதா அப்டேட் கொடுத்துருக்கார். ஆனாலும் அந்த படம் பத்தின வேற எந்த தகவலையும் சொல்லாம ரசிகர்களோட எதிர்பார்ப்ப எகிற வச்சிருக்கார். இன்னொரு பக்கம் இந்தப் படம் 'தேவர் மகன்' படத்தோட 2ம் பாகமா இருக்கலாம்ன்னு ஒரு பேச்சு அடிபடுது. ஏற்கனவே கமலும் ஏ.ஆர். ரஹ்மானும் சேர்ந்து 'தலைவன் இருக்கிறான்' என்ற தலைப்புல ஒரு படம் ஸ்டார்ட் பண்ணாங்க. இதுதான் மகேஷ் நாராயணன், கமல் கூட்டணில உருவாகப் போற படம்ன்னும் சொல்லப்படுது.

ஒரு முடிவுக்கு வாங்க
இப்படி ஆளாளுக்கு ஒரு அப்டேட்ட கொளுத்திப் போட, ரசிகர்களாம் இப்ப விக்ரம் கமல் மாதிரி ஃபயரிங் மோட்ல இருக்காங்க. இதுல இன்னும் ஒரு அமர்க்களமான அப்டேட் கொடுத்து ரசிகர்கள வெறித்தனமா எதிர்பார்க்க வச்சிருக்கார் மகேஷ் நாராயணன். அதாவது இந்த மூவில ஃபஹத் ஃபாசிலும் நடிக்கலாம்ன்னும், அதுபத்தின அபிஸியல் அப்டேட் சீக்கிரமே வரலாம்ன்னும் சொல்லிருக்கார். 'டேக் ஆஃப்', 'மாலிக்' இப்படி மலையாளத்துல மகேஷ் நாராயணனும் ஃபஹத் ஃபாசிலும் சேர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து சூப்பர் ஜோடியா வலம் வர்றாங்க. இப்போ கமல் படத்துலயும் இந்தக் கூட்டணி மாஸ் காட்டப் போறாங்களோ என்னவோ.?

ஃபஹத் யாருப்பா நீ..?
ஆரம்ப காலங்களில் ஃபஹத் ஃபாசிலை யாருமே கண்டுகொள்ளாம இருந்த நிலையில், தற்போது தனது அசுரத்தனமான நடிப்பால் அனைவரையும் பிரமிக்க வைக்கிறார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு என இந்திய சினிமாவின் டாப் ஸ்டாராக ரவுண்டு கட்டி வரும் ஃபஹத், கமலுடன் 'விக்ரம்' படத்தில் இணைந்து மிரட்டியிருந்தார். அப்போது ஃபஹத் ஃபாசிலை ரொம்பவே பாராட்டிய கமல், திரும்பவும் கூட்டணி வைக்குறதுல எந்த ஆச்சரியங்களும் இல்லைன்னு தான் சொல்லணும்.