»   »  அஜித் பட சாதனையை முறியடித்த மகேஷ்பாபு.. விஜய்யை முந்துவாரா?

அஜித் பட சாதனையை முறியடித்த மகேஷ்பாபு.. விஜய்யை முந்துவாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித் விஜய்யை முறியடித்த மகேஷ்பாபு..

சென்னை : யூ-டியூபில் வெளியாகும் திரைப்பட டீசர்களில் தமிழ்த் திரைப்படங்கள்தான் இதுவரையிலும் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், சமீபகாலமாக தெலுங்குத் திரைப்படங்களும் தமிழ்ப் படங்களுக்குப் போட்டியாக வளர்ந்து வருகின்றன.

இந்தியப் படங்களின் டீசர்களில் இதுவரையில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசராக விஜய் நடித்த 'மெர்சல்' டீசர்தான் இருக்கிறது. இந்தப் படம் 10 லட்சம் லைக்குகளைப் பெற்று உலக சாதனையுடன் முதலிடத்தில் இருக்கிறது.

Maheshbabu breaks ajiths record

அஜித் நடித்த 'விவேகம்' படம்தான் முதன்முதலில் டீசர்களில் அதிக லைக்குகளைப் பெற்ற படமாக இருந்தது. அந்த சாதனையை அடுத்து வந்த 'மெர்சல்' பட டீசர் முறியடித்தது. ரஜினியின் 'காலா' பட டீசரால் கூட மெர்சல் சாதனையை முறியடிக்க முடியவில்லை.

இப்போது 'விவேகம்' பட சாதனையை மகேஷ் பாபு நடித்து விரைவில் வெளிவர உள்ள 'பரத் அனி நேனு' பட டீசர் முறியடித்துள்ளது. 'விவேகம்' பட டீசர் சாதனையான 6 லட்சத்து 5 ஆயிரம் லைக்ஸ் சாதனையைக் கடந்து 'பரத் அனி நேனு' டீசர் 6 லட்சத்து 55 ஆயிரம் லைக்குகளைப் பெற்றுள்ளது.

இந்த டீசர்தான் இப்போது 'மெர்சல்' டீசருக்கு அடுத்த இடத்தில் உள்ளது. 'மெர்சல்' சாதனையை முறியடிக்க மேலும் 3 லட்சத்து 45 ஆயிரம் லைக்குகள் தேவைப்படுகிறது. அதையும் பெற்று 'பரத் அனி நேனு' டீசர் சாதனை படைக்குமா?

English summary
'Mersal' teaser featuring Vijay, is a highest liked teaser in Indian films. Ajith's 'Vivegam' teaser in second place. Mahesh Babu's next movie 'Bharath Ani Nenu' breaks ajith's record.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X