»   »  ஜி.வி.யை பார்த்து லைட்டா பயமா இருந்தது, இப்போ காத்துக்கிட்டிருக்கேன்: மஹிமா

ஜி.வி.யை பார்த்து லைட்டா பயமா இருந்தது, இப்போ காத்துக்கிட்டிருக்கேன்: மஹிமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐங்கரன் படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் சேர்ந்து நடிப்பது குறித்து மஹிமா நம்பியார் தெரிவித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்தவர் மஹிமா நம்பியார். சாட்டை படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தார். என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஜி.வி. பிரகாஷ் குமாருடன் சேர்ந்து ஐங்கரன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திலும் நடிக்கிறார்.

ஜி.வி.

ஜி.வி.

ரவி அரசு இயக்கி வரும் ஐங்கரன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் நடக்கிறது. மஹிமா முதல் முறையாக ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடித்து வருகிறார்.

பயம்

பயம்

முதல் நாளே ஜி.வி.யுடன் சேர்ந்து காதல் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. ஜி.வி. பிரகாஷுடன் முதல் முறையாக சேர்ந்து நடிப்பதை நினைத்து லைட்டா பயமாக இருந்தது என்கிறார் மஹிமா.

காதல்

காதல்

ஜி.வி. பிரகாஷ் வந்து எனக்கு கை கொடுத்தார். வாங்க காதல் காட்சியில் எப்படி நடிப்பது என்று ஒத்திகை பார்க்கலாம் என்றார். அவர் ஏதோ பல காலம் பழகியவரை போன்று பேசினார் என்று மஹிமா கூறியுள்ளார்.

நட்பு

நட்பு

ஜி.வி. பிரகாஷ் என்னிடம் நடந்து கொண்ட விதத்தால் எனக்கு பயம் போய் தைரியம் வந்தது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன் என்கிறார் மஹிமா.

English summary
Mahima Nambiar who is sharing screen space with GV Prakash in the upcoming movie Ayngaran finds her hero very friendly.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil