»   »  'ரஜினி உட்கார்ந்ததால் எங்க ஜீப்பும் லெஜன்ட் ஆகிடுச்சி'... மகிந்திரா சிஇஓ ஆனந்த் மகிழ்ச்சி!

'ரஜினி உட்கார்ந்ததால் எங்க ஜீப்பும் லெஜன்ட் ஆகிடுச்சி'... மகிந்திரா சிஇஓ ஆனந்த் மகிழ்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காலா பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு ஜீப் மீது ரஜினி அமர்ந்திருப்பார். அந்த ஜீப் மகிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்று.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்த மகிந்திரா நிறுவனத்தின் சிஇஓ ஆனந்த் மகிந்திரா, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற லெஜன்ட் அமரும் அரியணையாகப் பயன்பட்டதால், எங்கள் ஜீப்பும் லெஜன்டாகிவிட்டது", என்று ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Mahindra CEO's tweet on Jeep used as Rajini's Throne

ஜீப் என்பது இன்று வரை வாகனப் ப்ரியர்களின் விருப்பத்துக்குரிய வாகனமாகும். எழுபது, எண்பதுகளில் இந்த வாகனம்தான் பெரும்பாலான பணக்காரர்கள், தாதாக்களின் வாகனமாகத் திகழ்ந்தது. போலீஸ், அரசு அதிகாரிகளுக்கும் கூட இந்த வாகனம்தான். இப்போது மீண்டும் தார் என்ற பெயரில் இந்த வாகனம் களத்தில் இறக்கப்பட்டுள்ளது.


காலா படத்தில் தாராவி டானாக நடிக்கும் ரஜினிகாந்த் பயன்படுத்தும் வாகனம் இந்த ஜீப்தான். அதை முதல் தோற்றப் போஸ்டரில் காட்டியதன் மூலம், பெரிய விளம்பரம் கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்த் மகிந்திரா இவ்வாறு ட்வீட்டியுள்ளார்.

English summary
Mahindra Motors CEO Anand Mahindra expressed his happiness over using their Jeep as Rajinikanth's throne in Kaala.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil