»   »  ரஜினி அமர்ந்த ஜீப்பை எங்கள் அருங்காட்சியகத்தை வைக்க ஆசை! - ஆனந்த் மகிந்திரா

ரஜினி அமர்ந்த ஜீப்பை எங்கள் அருங்காட்சியகத்தை வைக்க ஆசை! - ஆனந்த் மகிந்திரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

காலா படப்பிடிப்பில் ரஜினிகாந்த் அமர்ந்த ஜீப்பை எங்கள் மகிந்திரா நிறுவனத்தின் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்க ஆசைப்படுகிறோம் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.

Select City
Buy Kaala (U/A) Tickets

ரஜினியின் காலா படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றில் ஒரு மகிந்திரா ஜீப் மீது ரஜினி அமர்ந்திருக்கும் காட்சி இடம் பெற்றது.


Mahindra Motors wants to s keep Kaala Jeep at their Museum

மகிந்திரா நிறுவனம் இதனை தங்களின் விளம்பரத்துக்காகப் பயன்படுத்த ஆசைப்படுகிறது. நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா நேற்றே இதுகுறித்து ஒரு ட்வீட் வெளியிட்டிருந்தார். அதில் 'ஜீப்பை ரஜினி அமரும் அரியாசனமாகப் பயன்படுத்தியதில் அதுவும் சரித்திர முக்கியத்துவம் பெற்றுவிட்ட'தாகக் குறிப்பிட்டிருந்தார்.


இந்த நிலையில் அவர் வெளியிட்ட இன்னொரு ட்வீட்டில், "எங்கள் நிறுவனத்தின் தார் ஜீப்பை '#காலா' படத்தின் படப்பிடிப்பில் பயன்படுத்துவது குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனே தெரியப்படுத்தவும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் #Superstarrajini அமர்ந்த அந்த வாகனத்தை எங்கள் நிறுவனத்தின் அருங்காட்சிப் பொருளாக மக்கள் பார்வைக்கு வைக்க ஆசைப்படுகின்றோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Mahindra Motors CEO Anand Mahindra wants to showcase the jeep used in Kaala first look in their museum for public view.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil