சூரியின் ‘மண்டாடி‘ படப்பிடிப்பில் பயங்கர விபத்து.. கடலில் தத்தளித்த படக்குழு!

சென்னை: நடிகர் சூரி ஹீரோவாக நடித்து வரும் மண்டாடி படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று தொண்டி கடற்பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படம் சூரி மீது இருந்த நகைச்சுவை கண்ணோட்டத்தை மாற்றி ஹீரோவாக பார்க்க வைத்தது. இதை தொடர்ந்து கருடன், கொட்டுகாளி, விடுதலை 2 மற்றும் மாமன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை சூரி கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் தியேட்டரில் வெளியாகி மிகபெரிய வசூலை அள்ளியது. அந்த படத்தை தொடர்ந்து ஹீரோவாக மண்டாடி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்க, முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். இப்படத்தில் சூரியுடன் இணைந்து சத்யராஜ், மகிமா நம்பியார், தெலுங்கு நடிகை சுஹாஸ் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய, பீட்டர் ஹெயின் சண்டை காட்சிகளை அமைக்க, கிரண் வடிவமைப்பாளராக பணியாற்றி வருகின்றனர்.

Soori Mandaadi acciedent
Photo Credit:

சூரியின் மண்டாடி: கடலில் மீன்பிடிக்க செல்லும்போது எங்கெங்கு மீன்கள் அதிகமாகக் கிடைக்கும். காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வரத்தையும் அவற்றின் திசைவழிப் போக்கையும் பற்றிய நல்ல அறிவையும் அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்கச் செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரையே இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மண்டாடி என்று அழைக்கின்றனர். மண்டாடி என்பது கடல் நீர்வாடு பற்றிய அழ்ந்த அறிவு உள்ளவர், நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என்பதாகும். இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

திடீர் விபத்து: இந்நிலையில், தொண்டி கடற்பகுதியில் இன்று படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில், படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியது. இதில் இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், படகில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள படப்பிடிப்பு சாதனங்கள் கடலில் மீழ்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான நடந்த இந்த சம்பவத்தில் நடிகர் சூரி, பாதுகாப்பாக இருந்ததாகவும், அவருக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. இந்த விபத்து குறித்து காவல்துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Read more about: soori சூரி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X