ரஜினிகாந்துடன் ’தலைவர் 170’-ல் இணையும் முக்கிய பிரபலங்கள்..இன்று லைகா அறிவிப்பு

ரஜினிகாந்த் லைகா நிறுவனத்தின் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். அதற்கான அறிவிப்பு இன்று காலை 10-30 மணிக்கு வெளியாகிறது.

அதில் ஒரு படத்தை ஐஸ்வர்யா ரஜினியும், இன்னொரு படத்தை சிபி சக்ரவர்த்தியும் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

மணிரத்னம் இயக்கப் போகிறார் ஷங்கர் இயக்கப்போகிறார் என்பதெல்லாம் காற்றோடு கரைந்து போனது.

 ரஜினியும் பெரிய நிறுவனங்களும்

ரஜினியும் பெரிய நிறுவனங்களும்

நடிகர் ரஜினிகாந்த் வாழ்க்கையில் முதன் முதலில் அங்கீகரிக்கப்பட்டது அவர் தேவர் ஃபிலிம்ஸ் படத்தில் நடித்ததிலிருந்து ஆரம்பமானது. ரஜினிகாந்த் முள்ளும் மலரும், ஆறு புஷ்பங்கள், சங்கர் சலீம் சைமன் வரை நடித்து பிரபலமானாலும் எம்ஜிஆரை வைத்து படம் எடுத்த பிரபல நிறுவனமான தேவர் ஃபிலிம்ஸ் எம்ஜிஆருக்காக யோசித்த கதையை ரஜினியை வைத்து 1978 ஆம் ஆண்டு தாய் மீது சத்தியம் என்கிற படத்தை எடுத்தது. அதன்பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் அன்னை ஓர் ஆலயம், நான் போட்ட சவால் படத்தை எடுத்தனர்.

 சூப்பர் ஸ்டாராக்கிய சுஜாதா சினி ஆர்ட்ஸ்

சூப்பர் ஸ்டாராக்கிய சுஜாதா சினி ஆர்ட்ஸ்

அதன் பின்னர் 1980 ஆம் ஆண்டு புகழ்பெற்ற சுஜாதா சினி ஆர்ட்ஸ் பில்லா படத்தை எடுத்தனர். அதே ஆண்டில் முதன் முறையாக ஏவிஎம் நிறுவனம் ரஜினிகாந்தை வைத்து முரட்டுக்காளை படத்தை எடுத்தனர். இதில் மிகப்பெரிய ஹீரோ ஜெய்ஷங்கர் வில்லனாக அறிமுகமானார். அதன் பின்னர் சத்யா பிலிம்ஸ் உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களின் படங்களில் ரஜினி நடித்தார். ரஜினிக்கு பிரேக் த்ரூ கொடுத்த படங்களில் சிவாஜி பிலிம்சின் சந்திரமுகியும், சன் பிக்சர்சின் எந்திரன், சிவாஜி உள்ளிட்ட படமும், லைகாவின் 2.0 படமும் எனலாம்.

 கலக்கலாக வந்த கபாலி..லைகாவுடன் ஒப்பந்தம் போட்ட ரஜினி

கலக்கலாக வந்த கபாலி..லைகாவுடன் ஒப்பந்தம் போட்ட ரஜினி

அதன் பின்னர் ரஜினி பல ஹிட் படங்களை கொடுத்துவிட்டார். அதில் முக்கியமானது தாணுவின் தயாரிப்பில் வெளிவந்த கபாலி எனலாம். அதன் பின்னர் ரஜினி நடித்த பல படங்கள் வசூலை வாரி குவித்துள்ளன. இந்நிலையில் மீண்டும் ரஜினிகாந்த் சன்பிக்சர்ஸ்க்காக ஜெயிலர் படத்தில் நடித்து அது விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் லைகாவின் 2 படங்களில் ஒப்பந்தமானார். இதற்கான அறிவிப்பு இன்று காலை வெளியாகிறது. ஒரு படத்தை ஐஸ்வர்யா ரஜினி இயக்குகிறார்.

 ரஜினியுடன் தலைவர் 170-ல் இணையும் பிரபலங்கள்

ரஜினியுடன் தலைவர் 170-ல் இணையும் பிரபலங்கள்

மற்றொரு படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். மணி ரத்னம், ஷங்கர் என்றெல்லாம் சொன்னது இல்லை என்றாகிவிட்டது. இன்று காலை 10-30 மணிக்கு இதற்கான அறிவிப்பு வெளியாகிறது. பெயர் வைக்கப்படாததால் தலைவர் 170 என அழைக்கப்படும் இந்தப்படத்தை சிபிச்சக்ரவர்த்தி இயக்க ரஜினிகாந்துடன் பிரபலங்கள் இருவர் இணைகிறார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் ரஜினியுடன் தளபதி படத்தில் நடித்த அரவிந்தசாமி, ரஜினியுடன் சந்திரமுகியில் கலக்கலாக நடித்த வடிவேலுவும் இணைகின்றனர். ரஜினியின் சமீபத்திய படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் இசையமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X