»   »  'மாணிக்' பாட்ஷாவாக மாறும் மாகாபா ஆனந்த்!

'மாணிக்' பாட்ஷாவாக மாறும் மாகாபா ஆனந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாகாபா ஆனந்த் நாயகனாக நடிக்கும் 'மாணிக்' படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

வானவராயன் வல்லவராயன் படத்தில் ஹீரோவாக அறிமுகமான மாகாபா ஆனந்த்துக்கு அப்படம் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான நவரச திலகமும் கை கொடுக்கவில்லை.

Makapa Anand Maanik Shooting Starts

இந்நிலையில் அடுத்ததாக இவர் நடிக்கவிருக்கும் 'மாணிக்' படத்தின் படப்பிடிப்பு இன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜையுடன் தொடங்கியது.

அறிமுக இயக்குநர் மார்ட்டின் இயக்கவுள்ள இப்படத்திற்கு பழனிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாயகியாக ‘எதிர்நீச்சல்' படத்தில் நடித்த சூசாகுமார் நடிக்கிறார்.

Makapa Anand Maanik Shooting Starts

தரண்குமார் இசையமைக்கவுள்ள இப்படத்தை மோஹிதா ஃபிலிம்ஸ் சார்பில் எம்.சுப்பிரமணியம், வினோத் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

பாட்ஷா படத்தில் வரும் ரஜினியைப் போல, இப்படத்தில் மாகாபா ஆனந்தின் புகைப்படங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Makapa Anand Suza Kumar Starring Maanik Pooja Held today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil