»   »  'மொக்கப்படம்’ மூலம் பாடகராகிறார் மா.கா.பா.ஆனந்த்!

'மொக்கப்படம்’ மூலம் பாடகராகிறார் மா.கா.பா.ஆனந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மொக்கப்படம் என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகராக உள்ளார் சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளரும், நடிகருமான மா.கா.பா.ஆனந்த்.

சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் மா.கா.பா.ஆனந்த். இவர் ‘வானவராயன் வல்லவராயன்' படத்தின் மூலம் சினிமாவிலும் நடிகராக அறிமுகமானார்.

அப்படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்திருந்த மா.கா.பா.விற்கு ரசிகர்களிடத்தில் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, அவருக்கு தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

பின்னணி பாடகர்...

பின்னணி பாடகர்...

இந்நிலையில், மொக்கப்படம் என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகராகவும் அறிமுகமாக உள்ளார் மா.கா.பா.

மொக்கப்படம்...

மொக்கப்படம்...

டி.ஆர்.ஜெயந்திநாதன் இயக்கும் இப்படத்தில் காதல், வெயில் படங்களில் கலை இயக்குநராக பணியாற்றிய வீரசமர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக அமிர்தா நடிக்கிறார்.

லவ் பண்ணுங்க...

லவ் பண்ணுங்க...

இப்படத்தில் நடிகர் ஸ்ரீமனின் தம்பி பிரபாகர் வில்லனாக அறிமுகம் ஆகிறார். வல்லவன் இசையமைக்கும் இப்படத்தில், ‘லவ் பண்ணுங்க லவ் பண்ணுங்க...' எனத் தொடங்கும் பாடலை பாடியிருக்கிறார் மா.கா.பா.

விரைவில் ரிலீஸ்...

விரைவில் ரிலீஸ்...

சந்திரா மீடியா விஷன் தயாரிப்பில் உருவாகும் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

English summary
Television host turned actor Makapa Anand has now crooned a song for the first time in 'Mokkapadam' in Vallavan's music.
Please Wait while comments are loading...